Skip to main content

Posts

ரெஃப்ரேஷ்ட் ஃப்ரெஷ்ட்ரேஷன் வென்ட்

இ து வெர்ஷன் டூ . பொதுவாக   Sequel  ஆக  எழுதுவார்கள் ஆனால் நான் இம்ப்ரூவ்ட் வெர்ஷனை சில சேர்க்கைகளுடன் அப்படியே திருத்தி எழுதிய வெர்ஷனை வெளியிடுகிறேன் . புதிதாகச் சேர்த்த இடங்களைத் தவிர , எடிட் செய்த அல்லது சேர்த்த இடங்களை நீலத்தில் சுட்டியிருக்கிறேன் . வாசித்து மகிழுக . -- குட்டி ஸ்டோரி 1: சகோ ஒருத்தர் , மிக முக்கியமான உடன்பிறவாச் சகோதரர் . நம் பதிவு ரொம்பக் கனெக்ட் ஆன மாதிரிச் சொன்னார் . அவரையும் இம்மாதிரி யூஸ் பண்ணும் மெட்டீரியல் மாதிரி அணுகியது மட்டுமின்றி , சைக்கலாஜிக்கல் அட்டாக்கும் நடத்தியிருக்கிறார்கள் போலும் . உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அவரும் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை . கதை முக்கியமில்லை , பின் கதை எல்லாமுமே ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்து , அட விட்டுத்தள்ளுங்கோ அண்ணா ... லைஃப்ல எல்லாம் அப்டிதான் ... போனா போறது என்றேன் . --- இது கதையல்ல நிஜம் ஸ்டோரி ( ஸ்டோரி 2): நான் உதவி என்றால் , வெறும் காசு என்னும் எலும்புத்துண்டை விட்டெறிந்து பிறகு அவன் நமக்கு அடிம...

நிச்சோட்னா

இ துவே ரொம்ப லேட்தான் . கொரோனா காரணமாகத் தள்ளிப்போய்விட்டது . எல்லாவற்றையும் ஆரம்பித்துவைத்தது மனிஷ் ஷா என்பவர்தான் என்று நான் சொல்வேன் . நான்கு ஸ்டேட்களைத் தாண்டி வெளியே போகாமல் இருந்த தமிழ் , தெலுங்குப் படங்களை உரிமை வாங்கி   சர சரவென்று குடிசைத்தொழில் மாதிரி டப் செய்து யூ ட்யூபில் வெளியிட்டார் . அவை இந்தியாவையும் தாண்டி , பங்ளாதேஷ் , பாகிஸ்தான் , நேபாள் என்று பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டன . ஒரு வகையில் பாகுபலிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்று கூட சொல்லலாம் . அதற்கும் முன்பு சங்கர் இயக்கிய ரோபோ படம் வந்தபோதுகூட , ஏதோ ரஜினி முகத்துக்காகவும் புகழுக்காகவும் இரண்டு ஷோக்கள் கூடுதலாக ஓடின , அவ்வளவே . பாகுபலியைப் பொறுத்த வரை அவ்வளவு பெரிய பட்ஜெட் , நடிகர்கள் என்று வைத்துக்கொண்டு ப்ரேவ் ஹார்ட் ரேஞ்சுக்கு எடுத்திருக்கவேண்டிய படத்தை , லும்பக் க்ளாஸிக்காக எடுத்து ஒரு மாஸ் ஹிஸ்டீரியாவையும் கிளப்பிவிட்டுவிட்டார் . வணிகப் படங்களாகவே இருந்தபோதிலும் , ராட்சஸன் மற்றும் விக்ரம் வேதா போன்ற நல்ல விறுவிறுப்பான கதை மற்று...