இ து வெர்ஷன் டூ . பொதுவாக Sequel ஆக எழுதுவார்கள் ஆனால் நான் இம்ப்ரூவ்ட் வெர்ஷனை சில சேர்க்கைகளுடன் அப்படியே திருத்தி எழுதிய வெர்ஷனை வெளியிடுகிறேன் . புதிதாகச் சேர்த்த இடங்களைத் தவிர , எடிட் செய்த அல்லது சேர்த்த இடங்களை நீலத்தில் சுட்டியிருக்கிறேன் . வாசித்து மகிழுக . -- குட்டி ஸ்டோரி 1: சகோ ஒருத்தர் , மிக முக்கியமான உடன்பிறவாச் சகோதரர் . நம் பதிவு ரொம்பக் கனெக்ட் ஆன மாதிரிச் சொன்னார் . அவரையும் இம்மாதிரி யூஸ் பண்ணும் மெட்டீரியல் மாதிரி அணுகியது மட்டுமின்றி , சைக்கலாஜிக்கல் அட்டாக்கும் நடத்தியிருக்கிறார்கள் போலும் . உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அவரும் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை . கதை முக்கியமில்லை , பின் கதை எல்லாமுமே ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்து , அட விட்டுத்தள்ளுங்கோ அண்ணா ... லைஃப்ல எல்லாம் அப்டிதான் ... போனா போறது என்றேன் . --- இது கதையல்ல நிஜம் ஸ்டோரி ( ஸ்டோரி 2): நான் உதவி என்றால் , வெறும் காசு என்னும் எலும்புத்துண்டை விட்டெறிந்து பிறகு அவன் நமக்கு அடிம...
An Open Personal Journal