Posts

மன நோய்களும் மருத்துவமும்

ம ன நோய் என்றவுடன் உடனே பைத்தியம் , சைக்கோ , சட்டையைக் கிழித்துக்கொண்டு திரிவது , ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பது என்று தமிழ் சினிமா வழங்கிய தற்குறித்தனமான அறிவையும்   சமீபத்திய அரைவேக்காட்டு ஞானத்தையும் மூலதனமாக வைத்துக்கொண்டு , அரைகுறை தமிழ் லிபிப் பரிச்சயத்தையும் துணைக்கு   அழைத்துக்கொண்டு பொறுக்கித்தனமாக இழித்தும் , பழித்தும் ஃபேஸ் புக்கில்   தெல்லவாரித்தனமாக எழுதிக்கொண்டு   திரிவது   என்பது வாடிக்கையாக மற்றும் பொழுது போக்காகப் போய்விட்டது . டிப்ரெஷனை எப்படிப் போராடி வென்றேன் , டிப்ரெஷனைவிட்டு வெளியேறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருந்தது என்று பல பிரபலங்கள் பேட்டி கொடுப்பதையும் காணமுடிகிறது .  அவர்கள் அவ்வாறு பேட்டிகொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று தோன்றுகிறது . உண்மையில் இதுவே குறைவு . இன்னும் அதிகம் பேர் , இம்மாதிரி பேட்டிகள் கொடுத்து மன நோய் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் . இருக்கும் மன நோய்களிலேயே   கொஞ்சம்  தப்பி வெளியேற முடிகிற ஒன்று என்றால் அது Depression எனப்படும் மனச்சோர்வு மட்டுமே . Anx