Posts

Rugged boys Vs Chocolate boys ஒரு பஞ்சாயத்து

சி ல பேருக்குதான் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும். கெவுருமென்ட்டு வேலைக்குச் சேர்ந்த ஆறே மாதங்களில் திருமணம் நடந்து, 'பொண்ணு கெட்டுன' இடத்திலிருந்து ஜாக்பாட் அடித்த மாதிரி ஏக்கர் கணக்கில் அசையாச்சொத்துக்கள், ஆடுமாடுகள், வண்டிவாகனங்கள் மற்றும் பெரும்பணம். உடனே சிலகாலங்களுக்குள் வாலன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிவிடுவார்கள். ஆனால் எனக்கு அதெல்லாம் இல்லை   பேசாமல்   பிழைப்பைப் பார்க்கலாம் என்றுவிட்டுதான் கொஞ்ச நாளைக்கு கையை வைத்துக்கொண்டு சும்மா எழுதாமல் இருக்கலாம் என்று   ஒதுங்கிக்கொண்டிருந்துவிட்டு எப்போதாவது ஒழிந்த நேரத்தில் சுய முன்னேற்றப் புத்தகங்களோ அல்லது சமையல் புத்தகங்களோ கிண்டிலில் போட்டுகொண்டு இருக்கலாம் என்று நினைத்தால், இந்த உலகம் நம்மை விடாது போலிருக்கிறது. அடுத்த பஞ்சாயத்து Rugged boys Vs Chocolate boys.      இந்த   ஷோவில் வரும் சிகப்பு கலர் ஹை நெக் அணிந்திருக்கும் வாயாடி ஃபிகர் மாதிரி (மாதிரிதான்) ஒரு ஃபிகரைக் கரெக்ட் பன்னுவது என்பதெல்லாம் சாக்லேட் பாய்களின் வாழ்நாள் கனவு. ஒரு காலத்தில் எப்படியாவது இந்த மாதிரி ஒரு கில்லாடி யங் லேடியைத்தான் கரெக்ட் பண்ணவேண்டும் என்று நினைத்

Catch you on the rebound

ச ரியாகப் பதினோரு மாதங்கள் . சென்ற வருடம் அக்டோபர் 26 தொடக்கம் இதுகாறும் பலதையும் கிறுக்கியாயிற்று . இன்னும் ஒரு வருடம் முழுமையாக முடியவில்லை . அதனால் என்ன ? தவிர்க்க முடியாதவைக்கு இந்த ஆண்டு நிறைவுகளையெல்லாம் அனுசரிக்காமல் இருக்க முடியாது அவைகளைத்தவிர ,  இந்தப் பிறந்தநாள் கிறந்தநாள் இதையெல்லாம் நினைவும் வைத்துக்கொள்வதில்லை , கொண்டாடுவதும் இல்லை . அதே போல் இந்த விஷயத்திலும் இதுவே ஒரு பெரிய சாதனைதான் என்று தோன்றியது . தொடரத்தான் வேண்டும் , எழுத்து உட்பட்ட பல நுண்கலைகளில் ஈடுபடுபவருக்கு சோர்வு என்பதே வராது , வரக்கூடாது . வாழ்வில் வேறு விஷயங்களுக்கு முன்னுரிமைகள் மிக அதிகமாக இருக்கும்போது , இது போன்ற முனைப்பான , அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் கோரும் விஷயத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டு செல்வது என்பது கொஞ்சம் சிலிர்ப்பூட்டும் விஷயம்தான் .    சில வருடங்களுக்கு முன் சென்னையில் தக்ஷின் சித்ரா என்னும் ஒரு அற்புதமான பாரம்பரியத்தைப்   பாடம் போட்டுக் காட்சிப்படுத்தும் இடத்துக்குச் சென்றிருந்தேன் . இந்தியாவில் உள்ள

ப்ளூ சட்டையும் லும்பன் கல்ட்ஸும்

இ ந்த ப்ளூ சட்டை மாறன் என்பவரின் சினிமா விமர்சனத்தை முதன்முதலில் ஒருவர் என்னிடம் காண்பித்தபோது, அடப்போய்யா என்றுவிட்டு பதிலுக்கு நான் -    பாஸ்கி, சங்கர் கணேஷைக் கூப்பிட்டு, இது ஒரு ஜாலி இன்டர்வியூ, நீங்க பாட்டுக்கு ஜாலியா என்ன வேணும்னாலும் காலாய்ங்க என்று சொன்னதுதான் மாயம், சங்கர் கணேஷ் அதை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு கலாய்க்கிறேன் பேர்வழி என்றுவிட்டு உட்கார்ந்துகொண்டே  மொக்கை கலாய் சமர்சால்ட் மற்றும்  ஸ்லாப்ஸ்டிக் என்று புகுந்து விளையாடியிருப்பார். அதைக் காதில் மற்றும் கண்களில் ரத்தம் வழிய வழியப் பார்த்துச் சிரித்து ரசித்திருப்பார் பாஸ்கி. அந்த வீடியோவைப் போட்டுக்காண்பித்தேன்.  அதில் வரும்  சங்கர் கணேஷ் டைப் ஆள்தான் என்றுதான் இதுநாள் வரை ப்ளூ சட்டை மாறனை நினைத்திருந்தேன் VTK பட விமர்சனத்தைப் பார்க்கும் வரை.  படத்தைப்பற்றித்  தன் வழக்கமான பாணியில் கலாய்க்கிறேன் என்று விட்டு   'பாஸ்கி சங்கர் கணேஷ்  இன்டர்வியூ ' பண்ணிக்கொண்டிருந்தவரை சும்மா போனைக் காதில் மாட்டிக்கொண்டு வாக்குவம் பண்ணிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று படத்தில் வரும் வசனம் ஒன்றைக்குறிப்பிட்டு ஏக

மனநலமும் இன்றைய சவால்களும் #5

ப ல பாக்டீரியாக்கள் மைனஸ் ஐம்பது   டிகிரி  கடும் சைபீரியக் குளிருக்குத் தாக்குபிடிக்குமென்றால் , வேறு பல பாக்டீரியாக்கள்   ப்ளஸ் இருநூறு டிகிரியிலும் உயிர் வாழும் . நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் ஹிபாக்ரிடஸ் (Hippocrates) என்னும் கிரேக்கர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா நோய்களும் வயிற்றிலிருந்துதான் தொடங்குகின்றன என்றார் . இங்கு தமிலுலகத்திலும்   உணவே மருந்து மருந்தே உணவு என்று நோய்களையும் உணவுப்பழக்கவழக்கங்களையும் வயிற்றையும் தொடர்புபடுத்தும்   பல   மரபுசார் மருத்துவ முறைகளும் உள்ளன . சித்த மருத்துவமும் வயிறுதான் மொத்த உடலுமே என்று வயிற்றுக்கு முக்கியத்துவம் தருகிறது . பாக்டீரியா என்று ஒன்று இருக்கிறது என்பதை டச்சு விஞ்ஞானி அந்தோனி ல்யூவேன்ஹோக் என்பவர் சொத்தைப்பல் ஒன்றின் திசுவைச் சுரண்டி சிறு கண்ணாடிச்சில்லின் மீது அப்பி , அதைத் தன் கையால் வடிவமைத்த நுண்ணோக்கி ஒன்றின் வழியாக நோக்கும்போதுதான் தெரியவந்தது . முதன் முதலில் பூதக்கண்ணாடி வழியே அவர் எட்டிப்பார்த்த உலகத்தில் தான் கண்ட உயிரின