Skip to main content

Posts

கன்வீனியன்ட் நாஸ்டல்ஜியா

Genre: ஆட்டோ ஃபிக்ஷன்   Category: பின் நவீனத்துவம்   Form: சிறுகதை   **************************  பலவருடங்களுக்கு திக்கேது திசையேது என்று ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டு , வாட்ஸப்   என்னும் யுகப்புரட்சி வெடித்து , ஒரு மிகப்பெரிய பிஸ்னஸ் மேக்னட் நண்பன் புண்ணியத்தில் க்ரூப் அமைக்கப்பெற்றது .  அதில் ஆரம்பத்தில் எந்நேரமும் நாஸ்டல்ஜியா கதைகள் . மச்சான் ஹாஸ்டல்ல நாம செருப்ப எடுத்து அடிச்சிக்கிட்டமே ? அப்பறம் பதினைஞ்சி யுகம் கழிச்சி அடுத்த செமஸ்ட்டர்ல கட்டிபுடிச்சிகிட்டு தூங்குனமே ? நீயும் நானும் கட் அடிச்சிட்டு கில்பான்ஸோ படம் பாப்பமே ? என்ற ரீதியில் இருக்கும் . பலரும் வாட்ஸப்பிலேயே கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்துகொண்டிருந்தார்கள் . நேரில் சந்தித்து , பழைய பாலமித்ரா கதைகளில் ( தலைப்பு : ஆப்த மித்திரர்கள் ) வருவது போல் மனக்கசப்புடன் பிரிந்த நண்பர்கள் , காலம்போன கடைசியில் தத்தமது தவறுகளை உணர்ந்து இறுதியில் ஒன்று சேர்ந்து கட்டிபிடித்துக் கண்ணீர் உகுப்பார்கள் .  அம்மாதிரிக் கதைகள் என்னிடம் பெரிதா...

ஸூடோ இலக்கிய ஆசான்களும் லும்பன் கல்ட்டுகளும்

இ ந்த ஸ்ட்ரக்சரலிஸம் ,  டீகன்ஸ்ட்ரக்ஷன் , போஸ்ட் மார்டனிஸம் , வண்டி மையிஸம் ( இதற்கு ரைமிங்காக வேறு ஒன்று வரும் அதை எழுதாமல் எப்படி சாமார்த்தியமாகத் தவிர்த்தேன் பார்த்தீர்களா ? சேர்வாரோடு சேர்ந்து அழிந்தது போதும் என்று திருந்திக்கொண்டுவருகிறேன் ) மயிரிஸம் , எல்லாம் பற்றி ஆங்காங்கே   என் அய்யன் கதைகளில்   குப்புறப்போட்டு குத்தி விட்டிருந்தேன் . இவைகளெல்லாம் வெறும் தியரிகள் . எவனும் கண்ணால் கண்டான் இல்லை . லிட்ரேச்சரில் பி . எச் . டி படித்தவர்கள் ஒலட்டும் மேட்டர்கள் . இங்கு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் எம் . பில்லோ பி . எச் . டியோ முடித்துவிட்டு , மொக்கை லெக்சர் கொடுக்கும் சப்ஜெக்ட்டுகள் . ஆனால் நேம் ட்ராப்பிங் மாதிரி , இதையெல்லாம் சிலர் மேம்போக்காகப் பெயர்களைத் தெரிந்துகொண்டுவந்து இங்கு தட்டிவிட்டுவிட்டு , நான்தான் தமிழ் இலக்கியத்தை உய்விக்கவந்த அவதாரம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் . இம்மாதிரி   ஸூடோ இலக்கிய பாபாக்கள் ஏன் தமிழ்நாட்டில் கல்லா கட்ட முடிகிறது என்னும் கேள்விக்கு விடைகாணும் முயற...