Posts

காந்த்தாரா

Image
க டந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து வியக்கத்தக்க தற்செயல் சம்பவங்கள் . அவைகளில் வெகு சுவாரஸ்யமான ஒன்று பஞ்சுர்லி . எங்கள் கொங்கு   மண்டல   துணிச்சல் எழுத்தாளர் வாமு . கோமு அவர்கள் நடத்தும் நடுகல் இலக்கிய இதழில் வெளிவந்த கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது . அதில் சத்தியப்பெருமாள் பாலுச்சாமி என்பவர் எழுதும் கட்டுரைகளும் கதைகளும் மரணக்காட்டு காட்டுகின்றன . ஆனால் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் வெளியே முகநூலில் வேறு ரூபம் காட்டுகிறார் . அது அவரது  சுதந்திரம், அதில் நான் தலையிடமுடியாது . சத்தியப்பெருமாள் பாலுச்சாமி மற்றும் அவரது ஆக்கங்கள் பற்றித் தனியே ஒரு மதிப்புரை எழுதவேண்டும் . அவை பிறகு . சில மாதங்களுக்கு முன் வெளியான நடுகல் இதழில் முக்கியமான ஒரு கட்டுரை ஒன்றின் தலைப்பு அது . தலைப்பை வாசித்துவிட்டு ரொம்ப இலக்கிய இதழ்த்தனமாக இருக்கிறதே , ஏதாவது டச்சு இலக்கியத்திலிருந்து மொழி பெயர்த்த சிறு கதையின் தலைப்பாக இருக்கக்கூடும் என்று உள்ளே சென்று பார்த்தால் , அற்புதம் ! நான் மேற்சொன்ன தற்செயல் நிகழவிருக்கிறது என்று அப்போ

எழுத்தாளர் தகுதிச் சான்றிதழ்

இ து நியாயத்திற்கு அய்யன் கதை ஸீரீஸில் அடுத்த கதையாக வந்திருக்கவேண்டியது. அவசரம் கருதி இந்த வடிவத்தில் வெளியாகிறது. சினிமாவில் போய் வசனம் எழுதுவதோடு இலக்கியம் முற்றுப்பெறுகிறது . அத்தோடு புதிதாக எழுத வருபவர்களளெல்லாம் வாலைச்சுருட்டிக்கொண்டு அங்கு போய் குட்டிக்கரணம் போடுகிறார்கள் . இவர்களைப் பொறுத்தவரை சினிமாவில் எழுதுவது என்பதுதான் இலக்கியத்தின் உச்சம் . இல்லைன்னா நாலு கத எழுதுனா பெரிய புழுத்தின்னு நெனச்சிக்கறானுக . இதுதான் ப்ராது .  ஆமா சினிமா டயலாக் எழுதறதுன்னா அவ்ளோ தொக்கா ராஜா ? தலகீழா நின்னாலும் நிம்ப நால முடியாது ஓய் .  அவன் வந்து ஒரு சீன்ல கதாநாயகன் தன் காதல சொல்லமுடியாம தவிக்கறான் . இந்த சீனுக்கு டயலாக் எழுதீருங்க ஜீ என்பான் . அப்போது அவனிடம் போய், நா ஆட்டோஃபிக்ஷன்ல போயி , பேல்றப்ப குண்டில இருந்து ரத்தம் ஒழுகற மாதிரி வேணா எழுதிக்குடுக்கட்டுமா ? அப்பறம் பன்னி வார வாங்கீட்டு வந்து நடுவெரல்ல தொட்டு உள்ள வுட்டுகிட்டதுக்கப்பறம் குண்டி ரத்தம் கட்டீருச்சுன்னு எழுதறேன் . எப்டி ஈட்டிய எடுத்து கீழவிட்டு மேல எடுத்

பொன்னியின் செல்வன்

ந ண்பன் ஒருவன் பியர் ப்ரெஷர் , வேறு வழியே இல்லை பார்த்தாக வேண்டியிருக்கிறது அதனால்   பார்க்கவிருக்கிறேன் சனி மாலை என்று மெசேஜ் தட்டினான் .  இதுநாள் வரை பிறந்தநாளுக்கென்று ஒன்றுமே செய்துகொள்ள மாட்டேன் என்கிறாய் . ஊரே சென்று பார்க்கிறது , இதையாவது செய் . ஃபைண்ட்   யூவர்   மீ டைம் அண்ட் என்ஜாய் என்று வீட்டில் க்ராண்ட் கிடைத்தது!   அப்படியே நெக்குருகிப்போய் டிக்கெட் போட்டுவைத்துவிட்டு காலை ஏழு முதல் மாலை   வரை பிழைப்பைப் பார்த்துவிட்டு ஏறக்கட்டி முடித்து விட்டு மணி பார்த்தால் சரியாக ஐந்தே முக்கால் . பிறந்தநாள் வழக்கம்போல், வழமைபோல் மற்றுமொரு நாளாக  முடிந்தது . தியேட்டர் வெறும் பத்துநிமிட ட்ரைவ்;   சரி என்று ஓடிச்சென்று அமர்ந்தால் -     இந்தியர்கள் வெள்ளைகாரப் பொண்டாட்டியையோ , கேர்ள் ஃப்ரெண்டையோ , இந்தியப்பெண்களாக இருந்தால் வெள்ளைக்காரப் பொண்டாட்டனையோ , பாய் ஃப்ரெண்டையோ    இழுத்துக்கொண்டு வந்து அமர்ந்திருந்தனர் . பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தொணதொணவென்று படம் நெடுக விளக்கம் . என்னருகில் தம்பதி சமேதராக , வெள்ளைப் பார்ட்னருட