Posts

கிளிக்கன்னி பற்றி...

ஏதோ ஒரு பேட்டியில் வா. மு . கோமு , கொங்குத்தமிழானது ஈரோடு மாவட்டத்துக்கும் திருப்பூர் மாவட்டத்துக்குமே மாறுபடும்   என்று சொன்னது போல் படித்த மாதிரி நினைவு . அதில் எனக்குப் பெரிதாக உடன்பாடு இல்லை .  மாறுபாடும்தான் ஆனால் ஈரோடு மாவட்டத்துக்கும் திருப்பூர் மாவட்டத்துக்குமிடையில் அல்ல . கோயமுத்தூருக்கும் சேலத்துக்கும் வேண்டுமானால் மாறும் . என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்   தமிழ் வட்டார வழக்குகளிலேயே கொங்குத்தமிழ் வழக்கு ஒன்றுதான் ஒரு பெரிய நிலப்பரப்பிற்குள் அதிகத் தேய்மானமில்லாமல் அப்படியே இருக்கிறது . மற்றவைகள் ஒரு முப்பதிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தாண்டினால் மாறிவிடும் . திருநெல்வேலி பாஷை ( அ ) நெல்லைத் தமிழை எடுத்துக்கொண்டால் , அருகிலிருக்கும் தூத்துக்குடியில் பேசப்படும் மொழிவழக்கிற்கும் அதற்குமே அத்தனை வித்தியாசம் . ஒரே மாவட்டத்துக்குள்ளேயே பல வேறுபாடுகள் . பாளையங்கோட்டையில் பேசப்படும் தமிழ் ஸ்ரீவைகுண்டத்தில் பேசப்படுவதில்லை . நாஞ்சில் தமிழில் காளியக்காவிளைக்கும் மார்த்தாண்டத்துக்குமே கூட வித்தியாசம் உண்டாம் . இது