Posts

Showing posts from November, 2021

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஏழு)

பெ ண்களில் உள்ள ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பிரச்னையை சுவடு தெரியாமல் அழிக்க வேண்டும் என்று முடிவு மட்டும் கட்டிவிட்டால் போதும், எந்த எல்லைக்கும் செல்வார்கள், எவ்வகையான ஆயுதம் வேண்டுமானாலும் ஏந்தத் தயாராகிவிடுவார்கள், எந்த யுக்தியையும் கையாள்வார்கள். துக்கம் துயரம் பிரச்சனையில் உழல்வது போன்றவையெல்லாம் வெறும் பாசாங்குதான். சில பெண்களைப் பார்த்தால் மேலோட்டமாக பிரச்சனையில் உழன்று அழுது புலம்புவது போல் தோன்றும் ஆனால் அதற்குப் பின்புலத்தில் ஏதோ ஒரு தீவிரமான தயாரிப்பு நடந்துகொண்டிருக்கும். சில வகைப் பெண்கள் அதீத நுண்ணுணர்வு கொண்டவர்கள் பிரச்சனை என்று ஒன்று முளைவிடுவதற்கு முன்னதாகவே ஞான த்ருஷ்ட்டியில் தெரிந்துகொண்டு அது விதையாகப் புதையுண்டு இருக்கும்போதே கிண்டி எடுத்து எறிந்துவிடுவார்கள். முற்றும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். முடிவு மட்டும் எடுத்துவிட்டால் எந்தப் படுகுழியில் இருந்தும், பாதாளலோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் முறியடித்துக் கொண்டு மேலே வந்து குன்றின் மேல் ஏறி அமர்ந்து அரசாளுவார்கள்.  அவளே ஒரு குடி அடிமையாக இருந்தவள்தான், முக்கியத்...

க்ளோஸ் த பாட்டில்

ஒ ரு வாரமாக நானே எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அதற்கான காலமும் சூழலும் இப்போதுதான் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. சாருவை இம்சித்த மொன்னை பிளேடுகள் மற்றும் நான் அவரிடம் போட்ட பிளேடு என்று எல்லாவற்றையும் தொகுத்து அவர் ஒரு அருமையான பத்தியைப் பதிவேற்றியிருந்தார்.  http://charuonline.com/blog/?p=11020 வழக்கமாக சாரு ஆர்மியை நோக்கி வெளியில் இருந்து வரும் தாக்குதல்கள், அவர்கள் குடிக்கிறார்கள், குடியை ஊக்குவிக்கிறார்கள் என்றெல்லாம் இருக்கும். அதற்கும் வழக்கமான எதிர்வினையாக நாங்கள்  எவ்வளவு  உயர்தரமான மது அருந்துகிறோம், என்ன மாதிரியான ரம்யமான சூழ்நிலையில் அமர்ந்து அருந்துகிறோம், என்ன விதமான  தத்துவ மற்றும் இலக்கிய விசாரணைகளில் ஈடுபட அது உதவுகிறது என்றெல்லாம் இருக்கும். நான் புரிந்துகொண்ட வரை எதுவுமே குடிவெறியையோ அல்லது indulgence-ஐ  ஆதரிக்கும் வகையிலோ இருக்காது. மாறாக அளவாக உபயோகிக்கும்வரை குடி ஒரு உணவுப்பொருள்தான், வேறு யாரையும் அது துன்பப்படுத்தாத வகையில் இருக்கும் வரை, பொறுப்பாக அதில் தேவையான அளவு மட்டும் ஈடுபட்டு வெளியேறுவது எப்படி என்று எங்களுக்குத்தெரி...

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஆறு)

ஆ யிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு சென்னையில் அக்டோபர் மாதம் ஒரு ஆறு நாட்கள் தொடர் அடமழை விடாமல் கொட்டித் தீர்த்தது.  அது பற்றி அசோகமித்திரன் கூட, தான் சிறுவனாக இருக்கும்போது செகந்தராபாத்தில் இருந்து எப்படி வண்டி மாறி மாறி சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை போகமுடியாமல் மாம்பலத்திலேயே லோக்கல் ட்ரெயின் நின்றுவிட்டது என்பது பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். மொத்த சென்னையையும்  கடற்கோள் கொண்டுவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு என்னூர், திருவொற்றியூர், எழும்பூர், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் டவுன், சிந்தாதிரிபேட்டை, சாந்தோம் என்று மொத்த சென்னையும் நீரில் பல நாட்களுக்கு மூழ்கித் தத்தளித்ததாம்.  ஐஸ்ஹவுஸ் பாதி உயரத்துக்கு மேல் நீரில் மூழ்கியது. அதில் முன்னொரு காலத்தில் பாஸ்டனில் இருந்து கப்பலில் பல மாதங்கள்  பயணம் செய்து மதராஸ் துறைமுகம் வந்தடைந்த பனிப்பாளங்கள் காற்றோ சூரிய ஒளியோ புகா வகையில் அமைக்கப்பட்ட பல பனி மண்டபங்களில் வைக்கப்பட்டன. அம்மண்டபங்கள் கூட முற்றாக மூழ்கி விட்டன. இப்போது போலீஸ் ம்யூசியமாக இருக்கிறது அல்லவா? அது 1...

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஐந்து)

இ ந்த மூடிக்குடியே கூட மணங்களைப் பகுத்தறியவியலா கோதையின்  நுகர்சிப்  புலன் சார்ந்த ஒரு குறைபாடு காரணமாகத்தான்  சாத்தியப்படுகிறது. வயிற்றினுள் மெதுவான வன்கோரத்துடன் விரவிப்பரவுகின்ற கச்சைச் சாராயம் விருவிருவென உட்கிரகிக்கப்பட்டு குருதியில் கலந்து நாசிவழியே கசிந்து நாறிக்கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் சத்தமில்லாமல் போய்ப்  புழங்க முடிகிறது. சில மூடிகள் அதிகமானால் அதற்கும் வினை.  வீட்டில் குடிக்கத்தொடங்கியவனை சில முறை எச்சரித்தும் கேட்கவில்லை. உனக்கு என்னடி தெரியும் ஆபீசுல எவ்ளோ ப்ரச்சன தெரியுமா? சரக்கடிச்சா எவ்ளோ ரிலாக்சா இருக்கு தெரியுமா? என்றுவிட்டு நடு நடுவில் எமொஷனல் ரொமான்ஸ் கொடுத்தான். அது அவளுக்குப் புரியவே இல்லை.  ஆனால் அதில் ஒருவித  ஒருவித கிக் இருந்தது. அட இது புது மாதிரி இருக்கிறதே என்று முதலில் ரசித்தவள், இவன் ரொம்ப ஓவராகப்போகவே, ஊரில்  உள்ள  சில அக்காள்களிடம் போன் செய்து கேட்டிருக்கிறாள். அவர்களே குடி கிராஜுவேட் ஆகிப் பலவருடங்கள் ஆகின்றன. குடல் கறியுடன் ஊறுகாய் நக்கிகொண்டே ஒன்றரை குவாட்டர் அடித்துவிட்டுப் புருஷனுடன் ஜாலி ப...

கிரிக்கெட் ஆயாசம்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இதோ நேற்று முன்தினம்தான் நடந்து முடிந்தது. அதற்குள் நியூஸிலாந்து இந்தியாவில் வந்து T20 பை லேட்டரல் ஸீரீஸ் ஆடத்தொடங்கி முதல் போட்டியில் தோற்றும் ஆகிவிட்டது! எழுதுவதற்கே இவ்வளவு ஆயாசமாக இருந்தால், தொடர்ந்து ஐபிஎல் உ.கோ மற்றும் இன்னபிற சீரீஸ்களில் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கும் அணிகளுக்கும் எப்படி இருக்கும்? இயந்திரம் மாதிரி எப்படித்தான் ஆடித்தீர்க்கிறார்களோ தெரியவில்லை. ரசிகர்களும் கொஞ்சம்கூட அலுப்பேயில்லாமல்  கண்டு களித்துத் துன்பம் துய்க்கிறார்கள்.  முன்பெல்லாம் ஒரு நாள் உலகக்கோப்பை முடிந்தவுடன் ஒரு மாதம் கழித்து சம்பிரதாயமாக ஒரு அணி இன்னொரு நாட்டில் போய் ஒரு தொடரில் ஆடும். அல்லது மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர், பிறகு ஒரு அணி ஊர் திரும்பிவிட மற்ற இரு அணிகள் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடர் ஒன்றை ஆடி முடித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். அவ்வளவுதான் அடுத்த உலகக்கோப்பை வரை ஈயாடும். எந்தப்போட்டிகளும் எங்கும் நடக்காது அவ்வப்போது இந்திய அணி ஷார்ஜாவில் போய் விளையாடிவிட்டு பாகிஸ்தானுடன் தோற்றுத்திரும்புவதுடன் ச...

ஊர்ப்பெருமையும் ஊரின் பெருமையும்

Image
 சொ ந்த ஊருடனான பற்றுதலும் பெருமையும்  இல்லாமலா நான் என் அகவையில் பாதிக்கும் மேலான வாழ்நாளை தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களில் பராரியாகச் சுற்றித்திரிந்தும் மொழி மறவாமலிருப்பேன்? அதுவும் சாதாரண ஊரா? கொங்கு மண்டலத்தின் இருதயப்பகுதியிலிருக்கும் ஓர் ஊர். எம்  பாட்டனார் பெயரால்  ஒரு தெரு கூட அமைந்திருக்கும் ஊர். அனைத்திற்கும் மேலாக நாகேஷ் பிறந்து வளர்ந்த ஊர். அவரைப்போலவே அதே சமூகத்தில் பிறந்து அதே தெருக்களில் வளர்ந்து கனவை வளர்த்துக்கொண்ட சீனி, இப்போது அவர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் கூட வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது.  ரங்கநாதன் என்ற ஒரு நண்பன் பற்றி முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா? அவன் வீட்டிற்குப் பக்கத்து வீடு சீனிக்கு. ஒரே கிணறு, ஒரே சுவர்! அப்போதைய சீனிக்கு இப்படி ஒரு தேடுதல் உண்டு என்பதெல்லாம் எனக்கெல்லாம் வெறும் கூறக் கேள்வி மட்டும்தான். எனக்குத் தெரிந்த சீனியிடம் நான் கண்ட விஷயங்கள் இரண்டு.  ஒன்று நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் அமர்த்தலான நகைச்சுவை உணர்வு.  இரண்டாவது இசை மீதான ஆர்வம்.  கிண்டலும் கேலியும்  அவர் முகத்தில் புள்ளி ...

சாவியின் ஆவியும் கவுண்டமணியின் கேர்ள் ஃப்ரெண்ட்டும்

இ துவரை போட்ட பதிவுகள் அனைத்துமே உட்கார்ந்தால்  ஒரே சிட்டிங்கில் பரபரவென அடித்து ஒரு மாதிரி தேறி வந்ததுமே மேலோட்டமாக ஒரு மேய் மேய்ந்துவிட்டு அப்படியே பதிவேற்றியிருந்தேன். ஒரு சிலவற்றை சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் லேசாகச் செப்பனிட்டதும் உண்டு. ஆனால் சென்ற அமெரிக்க தீபாவளியும் த்ரிநாரீ நர்த்தனாவும் என்ற பதிவை மட்டும் ரொம்ப நேரத்திற்கு திரும்பிப் பார்க்க மனமே வரவில்லை. எழுதி முடித்தபிறகு கழிவிரக்கம் காரணமாக கிட்டத்தட்ட அழுதே விட்டேன். பின்னே? பிள்ளையார் சுழி போட்ட அடுத்த நொடியே  ராஜி வந்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று ரொம்ப ஆர்வமாக சிரித்துக்கொண்டே கேட்க, நானும் ரொம்ப வெள்ளந்தியாக டாபிக் இன்னதுதான் என்று காது வரை இளித்துக்கொண்டே சொல்லித்தொலைத்து விட்டேன். பொறி வைத்துப்பிடித்துவிட்டாள் கெரகம். ஒரு அக்ஷரம் தமிழ் தெரியாவிட்டாலும் நான் என்னவெல்லாம்  எழுதுவேன் எப்படியெல்லாம்  எழுதுவேன் என்று என் மூஞ்சியைப் பார்த்ததுமே எப்படித்தான் கண்டு பிடிக்கிறாளோ தெரியவில்லை. அறவே எழுதக்கூடாது. உன்னால் எங்களையும்  ஜட்ஜ் பண்ணுவார்கள், outcast பண்ணிவிடுவார்கள் என்று ஒரே அடம். ...

அமெரிக்க தீபாவளியும் த்ரிநாரீ நர்த்தனாவும்

  எ ன் முதல் ப்ளாக் எழுத உட்கார்ந்த  ஒரிரு  மணித்துளிகளுக்குள்ளாகவே இடர்பாடு ராஜி வடிவில் வந்துவிட்டது. Dayton தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் அக்டோபர் 30ம் தேதி நடக்கவுள்ள  தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாரீர்!  நுழைவுச் சீட்டிற்கு அக்டோபர் 26 ம் தேதிக்குள்ளாக பதிக, பிந்துபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த துண்டு பிரசூரத்தை வாட்ஸப்பில் எனக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. உட்கார்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் கடந்தும் எழுத விரல் வரவில்லை உங்கள் முதுகுக்குப்பின் யாராவது வந்து நின்றுகொண்டு திரையை முறைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் ராஜிக்கு முற்றாக தமிழ் எழுதவோ படிக்கவோ அல்லது முறையாக பேசவோகூடத் தெரியாது. என்ன என்று திரும்பிப்பார்த்தால், முறைப்புடன் தீபாவளிக்கு என்ன திட்டம் என்ற வினவல். சரி என்று நான்கு பேருக்குமாக ஐம்பது வெள்ளிகள் பணங்கட்டச் சென்றால், Zelle வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்குள் வங்கி அலுவல் நேரம் முடிந்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் ராஜியை ஏறிட்டால்,...

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் நான்கு)

சா ருவுக்கு இந்த பாஸு என்றோ, தல அல்லது  ஜீ என்று போட்டு பேசினால் அறவே பிடிக்காது, படு அலர்ஜி. அம்மாதிரி நெருங்கிய வட்டத்துக்குள் வேறு யாராவது பேசி இவர் கேட்க நேர்ந்தாலோ அல்லது இவரிடம் அப்படி யாரவது பேச முயன்றாலோ அவ்வளவுதான் சோலி. இதுவே ஒரு பத்து வருடங்கள் முன்பு என்றால் வாடாங் ங்கோத்தா என்று தொடங்கியிருப்பார். சாதாரணர் எல்லோரும் போடா ங்கோத்தா என்றுதான் தொடங்குவர், ஆனால் இவர் அப்படியில்லை, என்ன விவகாரம் என்று தெரியவில்லை.  இப்போது எல்லாம் மாறிவிட்டது ஒரு வேளை அராத்துவுடனோ அல்லது ஸ்ரீராமுடனோ புது ஆள் ஒருவர் பாஸு கீஸு என்று பேசுவாரேயானால் சாரு  அந்த aversion ஐ வெளிக்காட்டாமல் சரி சீனி நான் நாளைக்கி கால் பண்றேன், ஆழ்வார்பேட் லேர்ந்து Cat Kibble வருது போன வாட்டி வாட்ச்மேன் வாங்கி ட்ராவர்ல வச்சி மறந்துட்டு  இல்லவே இல்லனு சாதிச்சிட்டார், மழை வந்து புழுப்புழுத்தப்பறம் குப்பைல கிடந்ததை அவந்திகா பாத்துட்டு, அவுளுக்கு பொறுக்கவே முடியல, நான் கிளம்பறேன் என்று நைசாக  நழுவிவிடுவார். அராத்துவுக்கு ச்சை அட ஆமால்ல என்று உடனே தலைவருக்கு என்ன பிரச்சனை என்று புரிந்துவிடும். ஏனெ...

புனீத்துக்கு ஒரு தாஸாஞ்சலி

Image
பு ரந்தரதாஸர் நான்கு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கீர்த்தனைகளை எழுதியிருக்கிறாராம்! அவரைபற்றியெல்லாம் எழுதுவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் கீர்த்தனைகளையாவது கேட்டோ பயின்றோ இருக்கவேண்டும். அது தவிர கன்னட மொழியும் ஸமஸ்க்ருதமும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம், அவருடைய கீர்த்தனைகள் பக்தி இயக்கங்களின் தொடர்ச்சியாக நாம சங்கீர்த்தனை வகையில் வருவதால், அவைகளில் இருக்கும் சாராம்சத்தை ஓரளவு மொழிப் பரிச்சயம்  இருந்தால் கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும். மற்ற பாடல்களைப்பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் இந்த பாடல் கொஞ்சம் அக்காலக் கடினமான ஹளே கன்னடா மொழிவழக்கில்  இருப்பது போல் தோன்றியது.  இப்பாடலை நான் கேட்க நேர்ந்த இந்தத்தருணமும் புனீத் ராஜ்குமாரின் மறைவும் ஒரு வலிமிகு தற்செயல் என்றே குறிப்பிட வேண்டும்.  யாக்கை நிலையாமை பற்றி எத்தனையோ கேட்டும் படித்தும் இருப்போம் ஆனால் வேற்றுமொழியாக இருந்தாலும் இப்பாடல் அதை ரொம்ப உடைத்துச்சொல்வது போல் அமைந்துள்ளது. இப்பாடலின் ஒரு வரி முதலில் உண்மையை உடைத்து மென்சோகத்தை  ஏற்படுத்தி, பிறகு தொடரும் வரி அதைத் தேற்ற...

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் மூன்று)

ஒ ரு பெயருக்காக சிறுவயதில் இரு வேறு கட்டங்களில் ஆசிரியர்கள் விளம்பிய அடிகள் மூலம் இரு விஷயங்கள் நடந்தன. ஒன்று வன்முறையில் அவனுக்கு நம்பிக்கையற்றுப்போனது. இரண்டாவது கூப்பன் என்ற பெயருடனான ஒட்டுறவு. பள்ளிக்குப்பிறகு உள்ளூரிலேயே பிஎஸ்சி கணிதம் பயின்றவனுக்கு அங்கும் பெயர் காரணமாக, பாடி ஷேமிங் மாதிரி நேம் ஷேமிங்குகளைக் கடந்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டியிருந்தும் பணங்கட்டி பெயர் மாற்றிக் கொள்ளாத அளவுக்கு கூப்பன் என்ற மருவுப்பெயருடன் ஒரு வித Stockholm Syndrome ஏற்பட்டுவிட்டது. வேலை தேடி சென்னை வந்து சில வருடங்களுக்குப் பிறகுதான் தன் பிற்கால இலக்கிய வாழ்க்கைக்கு மட்டுமல்ல லௌகீக வாழ்க்கைக்குமான காட்பாதரான ராஜாபாதர்ஐக் கண்டடைந்தான்.  ராஜாபாதர் குடும்பத்துடன் 90களில் வட சென்னையில் இருந்து வேளச்சேரிக்குப் புலம் பெயர்ந்தவர். சரி இவருக்கு யார் இப்படிப் பெயர் வைத்தார்கள் என்ன ஏது என்று நோண்டப்போனால், பிறகு  கதைக்குள் போவது கடினம். ஆகவே அதைப்பற்றின inquisitiveness ஐக் கைவிட்டுவிட்டு மேற்கொண்டு தொடர்வதே நலன் பயக்கும். பார்ட்டிக்கு ஆல் ஓவர் சென்னையில் நடக்கும் எல்லா அஃபயர்ஸும் அத்து...