புஷ்பான்னா பயறு இல்ல ஃபயரு

புஷ்பா முதலில் தமிழில் தொடங்கி அறுபது வினாடிகளுக்குள் டப்பிங்கின் தரம் தந்த ஏமாற்றத்தினால் நெட்ப்ளிக்ஸில் தெலுங்கிற்கு மாறிக்கொண்டேன். ஹிந்தியிலெல்லாம்  கூட அடிபொழியாக ஷ்ரேயஸ் தல்படேவையெல்லாம் போட்டு அருமையாக மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள் (இன்னொரு அடி பொழி ஃபாலோ அப் டாபிக் அடுத்து வரவிருக்கிறது! க்ளூ? பான் இந்தியா ரிலீஸ் என்னும் ஓல்!!!). தமிழில் மட்டும் ஏன் இப்படி என்று தெரியவில்லை மனீஷ் ஷா முரட்டடியாக தமிழ் படங்களை, வந்து இறங்க இறங்கச்  சுடச்சுட டப் அடித்து, தன் வீட்டு ஆட்களையெல்லாம் டப்பிங் பேச வைத்து யூ ட்யூபில் விட்டு காசு சம்பாரித்தாரே, அதே தரத்தில் இருந்தது. தமிழர்கள்தானே என்று டேக்கன் ஃபார் க்ராண்ட்டட்டில் இப்படிச் செய்திருக்கக்கூடும். 

ப்ரோமோவில் இங்கு வந்து அல்லு அர்ஜுனை விட்டு  "நான் இங்கதான் போர்ன்தேன் இங்கதான் மட்ராஸிலோ வல்ந்துக்கறேன், நான் தமில் ஆலு, நீங்கோ ஒத்திக்கினாலும் இல்லனாலும் நான் தமில் ஆலு தான்" என்று பேசவைத்து மினிமம் ஒரு அறுபது கோடிக்கு விற்றுவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால் தமிழில் பாடல்கள் மட்டும் அப்படி இல்லை அது பற்றிப் பிறகு; அவைகளை படங்களில் கேட்கவில்லை தனியாகக் கேட்டு மாய்ந்துகொண்டிருக்கிறேன்.  

படம் ஆரம்பித்தபோது என்ன வேகத்தில் இருக்கிறதோ அதே வேகத்தில் இறுதிவரை சுவாரஸ்யமாகப் போகிறது. கடைசியில் வரும் ஃபகத் ஃபாசில் போலீஸ் கேரக்டர், சப் ப்ளாட்டாக இதே முதல் பாகத்திற்குள் வந்திருந்தால், மூன்று மணி நேரப் படம் பார்க்கும்போது இரண்டு மணி நேரப்படமாகத் தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அப்படி வந்தால், அடுத்த முந்நூறு கோடி எங்கிருந்து வரும்? மற்றபடி படம் பார்க்கும் போது மூன்று மணி நேரம் மூன்று மணி நேரமாகத்தான் உணர்கிறது.  

பொதுவாக தெலுங்குப் படங்களில் ராயலசீமா தெலுங்கு மொழி வழக்கு வில்லன்களுக்கோ காமெடியன்களுக்கோ விதிக்கப்படும். இதில் படம் முழுக்க அடி வேர் வரை ஊடுருவி, எல்லா பாத்திரங்களும் தமிழ்நாட்டை ஒட்டிய அதே தெலுங்கு மொழிவழக்கில் பேசுகிறார்கள். உதாரணத்திற்கு  டிஎஸ்பியின் நாய் அவரை அடையாளம் காணாமல் குலைக்கும்போது, வீட்டின் முன் காவலிருக்கும் சென்ரி பேசும் சிறு டயலாக்.

பாடல்களைப் பொறுத்தவரை ஒரு தெலுங்குப் படத்தில் இந்தளவு தேவையான இடங்களில் கதையை ஒட்டி வருவதே பெரிய விஷயம். இதை எழுதுகின்ற இத்தருணத்தில், ஜீவி பிரகாஷ் ஒரு பேட்டியில் மதராசப்பட்டினம் படத்தில் ஒரு பாடல், அந்தக் கதைக்குத் தேவையே இல்லை எனினும் வலிந்து அத்திரைப்படத்தில் அப்பாடலை வைக்கவைத்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஊ சொல்றியா பாடலை முன்னிட்டு  சாரு எல்லா வேலைகளையும் விட்டுவிட்டுக் களத்தில் இறங்கி கடுப்பாகி கருத்து எழுதுகிறார். அப்பாடல் எத்தனை கோடிகள் வசூலித்திருக்கிறது தெரியுமா சாரு உங்களுக்கு? பெருந்தேவி என்பவர் எழுதிய கவிதை ஒன்றை வெளியிட்டு விவாதத்தைக் கிளப்பி விட்டிருக்கிறீர்கள். இப்படம் ஒரு லும்பன் க்ளாஸிக் என்கிறீர்கள். சும்பன் தெரியும் அதென்ன லும்பன்? எங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் புரியும்படி எழுதுங்கள். 

முதலில் இந்த இலக்கியர்களெல்லாம் இவைகளைப் பற்றியெல்லாம்  கருத்து எழுதாமலிருப்பதைப் பற்றி எப்போது மறு பரிசீலனை செய்வார்கள்? புஷ்பாக்களையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அய்யா. உங்கள் சிஷ்யர்களைப் பணித்தாலே செவ்வனே செய்துவிட்டுப் போவார்கள். உங்களுக்கு என்ன  அவசியம் வந்தது? 

க்வின்டன் றரன்டினோ ஒரு பேட்டியில், உங்கள் கதையின் பாத்திரங்களுக்குள் வெகுஜன அறங்கள்  மற்றும் மதிப்பீடுகளையெல்லாம் புகுத்துவதை விட்டொழித்தால்  மட்டுமே உங்களுக்கு பல்ப் பிக்ஷன், கில் பில் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். புஷ்பாவைப் பார்த்தபோது யாரோ ஒரு வருங்கால தெலுங்கு றரன்டினோ ரசிக அஸிஸிடண்ட்  கதை விவாதத்தின்போது இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. 

பரட்டைத் தலை ஹீரோக்கள் காதலித்தால், நாயகிகள் காதலில் விழுந்தே  ஆக வேண்டும் என்பது குறித்த தங்களின் அக்கறையை வெளிப்படுத்தியிருந்தீர்கள் சாரு. தங்களின் கனிவான கவனத்திற்கு - நாயகி ஒன்றும் இங்கு இரண்டாம் ஆண்டு டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கவில்லை. நாயகன் செய்வது பெண்ணிய சட்டகத்தின்படி Stalking தான், தவறுதான்,  இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அவளின் அப்பன்? கொண்டாரெட்டியின் எடுபிடி! நாயகி கொண்டாரெட்டியின் தம்பியின் கண்ணில் இதுவரை படவில்லை. தெலுங்கு/ தமிழ்/ கன்னட கேன்வாஸில் இது ஒரு ஜாக்பாட் Subtext அய்யா!  சாதாரண சப் டெக்ஸ்ட் கிடையாது மேற்கொண்டு அறுபது கோடி ஒர்த் சப் டெக்ஸ்ட்!  

சப் பிளாட்டில் குடும்பப் பெயர் பிரச்சனையில் பிரேக்கப் ஆனாலும், என் சாமி பாடலுக்குப் பிறகு நாயகன் பேட்ச் அப் ஆனானா இல்லையா? காதலானது இப்பின்புலத்தில் விஜயித்ததா இல்லையா? சரி அதையெல்லாம் விடுங்கள், இப்போது உங்களுக்கு இருக்கிறது கச்சேரி சாரு. 

ஊ சொல்றியா பற்றி இலக்கியர்கள் ஆளாளுக்கு நாயகனின் உளவியலுக்குள் சென்று ஆராய்ச்சி! ஒரு உளவியல் மயிரும் கிடையாது. நேரடியாக வருகிறேன். எழுபது ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முறையாக சாமானைப் பற்றியிழுத்து  ங்கோ...அவ்ளோதான்டா நீயி என்று சொல்கிறது இப்பாடல். பாத் பிரேக்கிங் அய்யா மாரே பாத் பிரேக்கிங்! கொண்டாடப்படவேண்டிய ஒன்று. பெர்வெர்ட்டுகள் பார்த்துவிட்டுத்  தற்கொலை செய்துகொள்ளவேண்டிய பாடல். இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த பெண்ணியப் பாடல். பேக்கேஜிங் மட்டும் பழைய டெம்ப்லேட். எழுபதுகளில் மற்றும் எண்பதுகளில், பெரிய கட்சிகள் தங்களின் அதி உன்னதக்  கொள்கைகளைக்  கூட்டம் கூட்டுவதற்கு, ஆள் வைத்து ஃபுல் மப்பில் ரெகார்ட் டான்ஸ் ஆடிக்கொண்டே, அரை முலைகளைக் காண்பித்துக் கொண்டே பரப்புவார்கள். அதன் பரிணாம வளர்ச்சிதான் ஊ சொல்றியா. கொள்கைதான் வேறு.   

இலக்கிய சாஹிப் மார்களா, துரைமார்களா, அய்யா மார்களா, காது கொடுத்துக் கேளுங்கள்! உட்கிரகியுங்கள்! ஊ சொல்றியா உளவியல் பற்றிய உங்கள் வியாக்கியானங்களையெல்லாம் உங்கள் அக்குள்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். 

உன் அம்மாவிடமும் அக்காள் தங்கையிடமும் உள்ள அதே உறுப்புக்கள்தான் எங்களிடமும்  உள்ளன, நாங்கள் விருப்பப் பட்டாலொழிய  எங்களிடம் வந்து உங்களின் பொருக்கித்தனத்தை  காண்பிக்காதீர்களடா என்கிற செருப்படிதான் இப்பாடலின் உட்பொருள்! இது வருவதற்கே நூறு வருடங்கள் ஆகிவிட்டன. இது ஒரு தொடக்கம் மட்டும்தான் மேலும் உடைத்துப் பேசி, வாய்ப்புக் கிடைத்தால் வாலை ஆட்டும் ஆட்களின் முகத்திரையைக் கிழிக்கும் பல பாடல்கள் வர வேண்டும், வரும். 

ஊ சொல்றியா ஒரு பெஞ்ச் மார்க்!  புஷ்பா ஒரு கல்ட் க்ளாஸிக்!

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15