ஒரு பதிப்பகக் கதை

சி நாட்களாக ஜாலியாக ஒன்றும் எழுதாமல் ஓபியடித்துவிட்டு, கொஞ்சநேரம் என்னுடைய பழையவற்றைக் கிளறி ஆனந்தம் அடைந்துகொள்ளலாம் போதும் என்று நான் ஃபேஸ்புக்கில் பின் போஸ்ட்டில் போட்டிருக்கும் ஒரு கிண்டில் புத்தகத்தைக் க்ளிக் செய்து பார்த்தேன். "This Page is not available" என்று நாய்ப்படம் போட்டு ஒரு பேஜ்  வந்தது.  amazon.in, amzon.com, amazon.fr amazon.mx amazon.au என்று அனைத்திலும் இதே கதைதான். நாய்ப்படம் மட்டும் வெவ்வேறு கோணங்களில் இருந்தன.

 இதென்னடா புதுக்கெரகமாக இருக்குது என்றுவிட்டு, KDP support contact என்று கூகிள் சர்ச் செய்துபார்த்தால், எந்த நம்பரும் கிடைக்கவில்லை. பல பிரிவுகளுக்கு மத்தியில் எங்கோ ஒரு மூலையில் Book Status ஓளிந்துகொண்டிருந்தது. சாட் ஆப்ஷன் மட்டும் இருந்தது. முதல் நாள் சாட் செய்ததில் கிடைத்த தகவல். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல 72 மணிநேரம் கழிச்சி பாருங்க அப்பப்போ இந்த மாதிரி எதுனா ஆகும்.

 அடப்பாவிகளா ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுனு என்னோட ஒரே ஒரு பென் டு பப்ளிஷிங் சப்மிஷன்ரா இது. பல நாட்கள் உழைப்புடா. இதை எழுதி முடிப்பதற்குள் வீட்டில் நான் வாங்கிய திட்டுக்களுக்கும்,பதிப்பிப்பதற்குள் நான் வாங்கிய  ஏத்தால்களுக்கும் விலையே இல்லையடா.

 அடுத்த நாள் மறுபடி சாட். வேறு ஏதோ ஒரு பெயரில் ஏஜென்ட் வந்து, அது வந்துங்க கன்டென்ட் ரிவ்யூ டீம் ஏதோ ஈமெயில் அனுப்பீருக்காங்க பாருங்க செப்டம்பர் பதினஞ்சாம் தேதி. உங்க புத்தகத்த மொடக்கீருக்காங்களாம். ஏதோ காப்பி ரைட் இன்ஃப்ரிஞ்ச்மென்ட்டாம். நான் போய் தொழாவு தொழாவென்று தொழாவினால் ஈமெயிலும் இல்லை மயிரும் இல்லை. சோர்ந்துபோய் மறுபடி இன்னொரு முறை சாட். என் பெயரைக்கண்டவுடன் கட் பண்ணிவிட்டான். இப்படியே நள்ளிரவு வரை சேஸிங் தொடர்ந்தது. பிறகு எதற்கும் ஒரு முறை பார்க்கலாம் என்று Spam ஃபோல்டரில் சென்று பார்த்தால் அங்கு செவனே என்று Kindle Content Review என்று எழுதிஇருந்ததன் சுருக்கம் -

 "நீ போட்ட புத்கத்தோட அட்டப்படம் செரில, எங்கிருந்தோ நியூட்ரல் போட்ருக்கேன்னு தெரியுது. இதுலயெல்லா நாங்க நெம்ப ஸ்ட்ரிக்ட்டு. அதுனால உன்ர புத்தகத்த மொடக்கீட்டோம்.

 ஒழுக்கமா பொட்டாட்ட கீழ குடுத்துருக்கற மேனிக்கி எதாச்சி ஒன்ன செஞ்சுட்டீய்னா மன்னிச்சி உட்ருவோம். இல்லீன்னா நீ போட்ட அத்தனையையும் மொடக்கீட்டு மூட்டுப் போன்னு சொல்லீருவோம்.

 பாய்ண்ட் #1 - உனக்கு அட்டப் படத்த டிசைன் பண்ணிகுடுத்தவங்கிட்ட போய் நாந்தா வரஞ்சி குடுத்தேன். யூஸ் பண்டிக்கலாம்னுவோட்டு ஒரு லெட்டர் எளுதி கையெழுத்து வாங்கீட்டு வந்து குடுக்கோணும்.

முடிலியா?

பாய்ண்ட் #2 - அப்ப நாந்தான் ப்ராடுத்தனமா அட்டப் படத்தத் திருடிபோட்டுட்டங் மொதலாளி அப்டீன்னு சொல்லீட்டு, படத்த தூக்கியுட்டுட்டு மறுபடி புக்க சப்மிட் பண்ணீரு

நான் அந்தக் கவரை டிஸைன் செய்தது ஏதோ ஒரு ஆன்லைன் கவர் டிஸைன் ஆப் மூலம். எவனைப் போய் தொங்கி லெட்டர் வாங்குவது? இதெல்லாம் ஆகிற காரியமா என்றுவிட்டு, முதலில் அட்டையைத் தூக்கிவிடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒரு அட்டை இருந்தே ஆகவேண்டும் என்றது. வேறு வழியே இல்லாமல் பாடாவதி KDP Cover Designer வழங்கிய காக்காய் பீ பேண்ட மாதிரி இருந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து சப்மிட் செய்தேன். ஒரு ஈமெயில் தட்டினேன்.

ஐயா,

தங்களின் மிரட்டலுக்கு நான் அடிபணிகிறேன். அம்மிரட்டலுக்கிணங்க, எவனோ பிச்சை போடும் கவர் பேஜைத் தூக்கிவிட்டு தாங்கள் நல்கும் இசி டிசைனை அப்லோட் செய்திருக்கிறேன். ஆனால் இம்மாதிரி பிச்சை டிசைனில் எப்படி காப்பி ரைட் இன்ஃபிரிஞ்மென்ட் பிரச்சனை வரும் என்று மட்டும் சொன்னீர்களேயானால்....

 அதற்கு பதில் கடிதம். மேற்கண்ட அதே பாய்ண்ட்டுகள். கூடுதலாக மூன்றாவதாக ஒரு பாய்ண்ட்.

 "பாய்ண்ட் #3 நெம்ப எச்சுப்பேச்சு பேசாம ஒழுக்கப் பொச்சா காப்பி ரைட் இன்ஃபிரிஞ்மென்ட் இல்லாம சப்மிட் பண்டுனா பண்டு இல்லைன்னா, மொத்தமா மொடக்கீருவோம்"

 சரிடா சைக்குப் பொச்சா என்று மனதில் நினைத்துக்கொண்டு, மறுபடி காக்கா பீ டிசைனிலிருந்து பழம்புடவை டிசைனை செலெக்ட் செய்து மறுசப்மிட் செய்துவிட்டு, இன்னொரு ஈமெயில். பிறகு மூன்று நாட்களுக்குக் கிணற்றில் கல். பதறிப்போய் மேலும் ஒரு ஈமெயில், மொத்தமாக நக்கிக்கொண்டு போய்விட்டால் அவ்வளவுதான். ஒரு படத்தில் கவுண்டமணி முதலாளியிடம் எகத்தாளம் பேசிவிட்டு  போய்விட்டு, பிறகு வேலை உயிருக்கு உலைவைக்கும் வேலை என்று தெரிந்ததும், திரும்பி வந்து நீங்க டேன்னு கூப்புடுங்க டெட்ட டேய்ன்னு கூப்புடுங்க, ரெண்டு வேள சோறு மட்டும் போடுங்க எசமா போதுங் எசமா என்பார் அது நினைவுக்கு வந்து போனது. அதற்கெல்லாம் தைரியமில்லை. பிறகு மீண்டும் சில பல சாட்டுகள்.

 அவை அனைத்தையும் இங்கு கொடுத்தால் வாசிப்பவருக்கு அயர்ச்சியை மட்டுமல்ல ரத்தக்கொதிப்பையும் சேர்த்து உண்டாக்கும். வாசகரின் நலன் கருதி தேர்ந்த சில சாட்டுகளை மட்டும் இங்கே வழங்குகிறேன். வாசித்து இன்புறுக.

 Live Chat

 Agent B. 1:42:20 PM

 As we begin, you should NEVER mind any typos in our conversation.

 Hello. Thank you for contacting us. My name is Agent B., and I'll see if I can assist you today.

 To get started, can you provide your full name as it's listed on your *** account?

 நான்என் பெயர் எஸ். ப்ரஸன்னவெங்கடேசன்

நான்: எஸ் என்பது என் இனிஷியல். அது உங்கள் அக்கவுண்டில் பெயருக்குப் பிறகு போடுகிறார்கள். நீங்களாவது இனிஷியலை முன்னேயோ பின்னேயோ...எங்காவது போடுகிறீர்களே, அந்த மட்டில் மகிழ்ச்சி.

 Agent B. 1:43:25 PM

 Agent B: How may I help you today?

 நான்: Hey, this is regarding a title of mine, which reads 'Live' in KDP but not 'Live' for real

 நான்: ASIN: B********M

 Agent B: I see...

நான்: I got an email from the content review team, stating the cover page needs approval from the creator

Agent B: So..?

நான்: ...to which I replied stating that I used an online free app to create one...

நான்:...they gave me two options in the email

 Agent B: <typing....>

 இந்த இடத்தில்  நான் எந்தப்புத்தகத்தில் மறுபடி கேஸை ஜெயித்து, என் மேல் படிந்த கறையைத்துடைத்து மறு பதிப்பு செய்யபோராடிக்கொண்டிருக்கிறேனோ, அதே புத்தகத்தில் வரும் கதை ஒன்றில் ஒரு சினிமா டைரக்டர் வந்து வாட்ஸப்பில் மணிக்கணக்கில் Typing என்று வரப்பண்ணுவார். நான் நின்று தேவுடுகாத்தேன். காத்துவிட்டு, மறுபடி தொடர்ந்தேன் - 

 நான்: The options were...

 நான்:1 - either get written approval from the cover creator Or...

 நான்: 2 - remove the cover

 நான்: I chose option number two - removed the cover

 நான்: Then used KDP Cover design option and created and re-uploaded

 Agent B: <typing....>

மறுபடி தேவுடு

Agent B: <typing....>

Agent B: Ok

நான்:  I received a fresh email all over again for my astonishment

Agent B: Well bd

நான்: What?

Agent B: <typing....>

தேவுடு

Agent B: <typing....>

Agent B: Never mind. go ahead

நான்: the email reads "• No documentation has been provided confirming you have the rights to use the image on the cover"

நான்: I am not sure what's wrong

Agent B: i'm not sure either

Agent B: <typing....>

நான்: with my recent update to the cove and resubmission, I got an email stating the book is live

நான்: But you know what? it is not!

Agent B: what do you mean?

நான்: i mean ther eis a discrepancy between the status seen from my account and the book actually being online for sale. you know what i mean? the book is not live

Agent B: but you saif it is live, by the way i can''t tead your text with a ton of typo in it

நான்: my apologies. let me correct it for you

இந்த இடத்தில் சாட் அறுந்துபோய்விட்டது. மறுபடி சாட்டைத் தொடங்கினால், இப்போது வந்திருப்பவர் Agent C என்று தெரிந்தது. எல்லாவற்றையும் முதலிலிருந்து விளக்கிய பிறகு, மேற்கொண்டு இவ்வாறாகத் தொடர்கிறது        

 Me • 1:46:57 PM

நான்: Well, this is what happened. Can you please help me?

 Agent C. • 1:47:14 PM

 Agent C: I see the eBook is live, where do you see is not live?

 நான்: I explained everything. It says it's live...but it's not....look I explained you right? You got it right? Well lemme try to...

நான்:... You click on the book, it says the page is not available. Which is how it all started originally

Me • 1:48:05 PM

நான்: You see that as 'live' from your end right?

Agent C: The eBook just went live on 2022/09/26 at 17:03:05 UTC

நான்: That's the catch! Yet, you won't find it in any of the marketplaces. Trust me I'm not lying

Agent C: nay you are...

நான்: Excuse me!??

Agent C: I mean you are not...

Agent C: this means that we need to wait 72 hours to update the whole system

நான்: So I need to wait for 72 hours to see another 'Live' lie. Is that what you are sayin>

Agent C: Excuse me?

நான்: It is still with the content review team

Agent C: No

நான்: The book was reading "Live" even before

நான்: the content team took it down 

Agent C: <typing...>

Agent C: What content team?

நான்: Listen...I explained everything clearly. I even quoted each line from the email verbatim

Agent C: What verbatim?

நான்: I mean I copied everything from the email here, so I can set the context and you could help me. In other words, I was helping you help me

Agent C: I thought you said content. Now you are saying context...

Agent C: <typing...>

Agent C: Please help me help you. What is the issue?

End Chat

இந்த இடத்தில் மறுபடி ரீல் அறுந்து போய்விட்டதா? Agent D வந்தார். முதலிலிருந்து விளக்கி, ஓரளவு புரியவைத்தபிறகு மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறும்

Agent D: It takes 72 hours for the book to change its state to "Live" 

Agent D: 72 Max 

இந்த இடத்தில் Agent D விளக்குகிறார். சிரத்தையுடன் விளக்குகிறார். அதிக பட்சம் 72 மணிகள் என்று ஆசுவாசப்படுத்துகிறார். எனக்கு ஆசனவாய் திகுதிகுவென எரிந்தது

Me • 1:50:46 PM 

நான்: Please try and understand...it's not the question of the book being 'live'. I had resubmitted the book at least 4 times in the past 10 days. Every single time with a new KDP cover. I don't mind having a shitty KDP cover, I don't mind having no cover at all either, I will go coverless from here on...from now on...I hate covers...covers hate me. I will never use a cover for my ebooks ever again if only KDP permits. Please help me publish my content.....ppllleeeaaassseee..... 

எந்த சைக்கச்சி மகங்யளோ புத்தகத்தை முடக்கிவிட்டான்கள் நான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பாறாங்கல்லில் சென்று முட்டிக்கொண்டது போல் சாட் ஏஜென்ட்டுகளிடம் போய் முட்டிக்கொண்டேன். வேறு வழி? இது ஒன்வே மாதிரி. இவன்கள் வழியாகத்தான் பேச முடியும். ரிவ்யூ டீம் தாயோளி மகன்கள் எவனும் ஒழுங்காக பதிலும் எழுதமாட்டான். அடித்ததையே திரும்பத் திரும்ப காப்பி பேஸ்ட் அடிப்பதற்கே இவ்வளவு குஞ்சு கொழுப்பு. இங்கு இடுப்பொடிய உட்கார்ந்தது எழுதும் எழுத்தாளன் போய் அவனுக்கு ஊம்பிவிட்டுக்கொண்டிருக்கவேண்டும்

Agent D: It can take up to 72 hours to appear, however Prasanna. I'll open a ticket for the Content Review Team to contact you. 

Agent D: 1:51:30 PM 

Agent D: May I confirm your email address? 

நான்: yenmail@gmail.com 

நான்: Every time I chat, I have to talk this through fresh like a new topic 😟

நான்: Please publish my work... it's hard written

Agent D: I'll escalate it

நான்: Escalate it to who? Are you telling on me to the content team? Don't you please...I'm a poor Tamil writer...

Agent D • 1:53:49 PM

Agent D: No 😁 ...the Content Review Team still needs to check the ticket

 நான்: Ticket? You rose a ticket for me?!!

 Me • 1:53:49 PM

 Agent D: Yes. I can give you a case number 

 Agent D • 1:53:55 PM

 நான்: You know what? you are godsent!

 நான்: Thank you

 Agent D: U r welcome and have a nic

 Agent D: Apologies for the typo. Hae a nice d

 Agent D: <typing...>

 End Chat

 ஒரு வழியாக டிக்கெட் கிளப்பிவிட்டாயா அது போதும் என்று சட்டென்று வெட்டிவிட்டுவிட்டு ஆசுவாசமானேன். இப்படியாகத் தொடர்ந்து சில நாட்களாக முட்டி மோதி, இறுதியில் நானே டிக்டேட் பண்ணி எழுதவைத்து ஒரு டிக்கெட் எழுப்பி, எஸ்கலேட் செய்து அடுத்த 24 மணிநேரங்களில் புத்தகத்தை மறுபடி பதிப்பித்தேன்வெகு சமீபத்தில்தான் ஒரு பிரபல நடிகையுடனான நட்பில் சாகசங்கள் பல செய்து, விழுப்புண் வாங்கி முடங்கிப் போயிருக்கிறேன். இப்போது போய் அந்தப்புத்தகத்தை முடக்கலாமா? அந்த ஓசி அட்டைப்படத்துக்குக்  காப்பிரைட் இன்ப்ஃரிஞ்ச்மென்ட் கிளப்பிய அயோக்கியப்பயலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.


Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience