உண்மையில் இது "மனநலமும் இன்றைய சவால்களும்" இன் #7 ம் பகுதியாகும். "மெண்டல்" தொடர் என்கிற காரணத்தினால், யாரும் வாசிப்பதில்லை.ஒரு Click Bait செட் செய்து, தலைப்பை மாற்றி இட்டிருக்கிறேன். மெதுமெதுவாக உலகில் உள்ள மிக முக்கியமான மெண்டல் பிரச்சனையான பைபோலார் பற்றி ஆர்வத்தை வரவழைப்பது எம் கடமை என்று நினைப்பதால் இவ்விழைவு.
கட்டுக்கடங்கா
உற்சாகம், விளிம்புவரை தளும்பி வழியும் மகிழ்ச்சி, துள்ளல், அதீத ஆக்கவளம், எல்லா
வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்வது, உலகத்தில் யாருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும்
உடனே அதில் தலையிட்டு அதை முடிக்கும் வரை
உறுதியுடன் இருப்பது, ஊன் உறக்கமின்றி, அன்னஆகாரமின்றி
எந்நேரமும் பரோபகாரச் சிந்தனை, அனுமானிக்க இயலவிலா இலக்குகளை சுயநிர்ணயம் செய்துகொள்வது.
"அடுத்த வருஷம்
இதே நாள் வீடு வாங்குவேன்,
சொந்தவீட்டுல காலடி எடுத்து வைப்பேன் மெர்சிடீஸ்ல
போய் ராணி மாதிரி எறங்குவேன்"
"அந்தத் தேவிடியா என்னமா பீத்திக்கறா... என் கால் தூசுக்கு
சமமாவாளா பச்சத் தேவுடியா? காமிக்கறேன்டா தாயோளிகளா, தேவுடியாளுகளா உங்ளுக்கெல்லாம்
நான் யாருன்னு...."
"நான் யாருன்னு
நெனைச்சீங்கடா, அவதாரம்டா...உங்களையெல்லாம் உய்விக்கவந்த குல
சாமிடா. உங்க வீட்டு விசேஷத்துக்கு
வந்தா, அந்தத் தேவுடியால மட்டும் அந்தத் தாங்கு தாங்குனியேடி? அவுளுக்கு மட்டும் ஆரஞ்சு ஜூஸு, நான் ஒருவாய் தண்ணி
கேட்டதுக்கு அங்க போயி அண்டாவுல
இருந்து சொம்புல மோந்து குடி! தூ ஈனப்பொறப்புல பொறந்த தேவுடியா மகளே "
"அந்தக் குடும்பமே
நாசமத்துப்போக, அந்தத் 'தே' வோட புருஷன்
இருக்கானே, சக்களத்தி முண்டைக்கிக்கிப் பொறந்தவன். அவனுக்குப் பொறந்ததுக எப்புடி இருக்கும்? அந்தச் சின்னவ இருக்காளே, அவ முழியாங்கண்ணப்பாரு, மூணு வயசுலயே
எவங்கூடையாச்சிம் போய்ட்டு வந்துருவா, அப்புடியே அவங்காத்தாள மாதிரி. பெரியவ அஞ்சு வயசு கொழந்த மாதிரியா
நடந்துக்கறா? எந்நேரமும் இவன் இருக்கானே எடுபட்ட
செருக்கி மகன், எம்புருஷன், அவம்மேலயே ஒரு கண்ணு."
எப்படி, போதவில்லையா? மேற்கொண்டு வாசியுங்கள்.
சண்டை
தொடங்கினால், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு நாட்கள், வீட்டுக்குள்
நரகம் நரகம் நரகம் நரகம். ஊரே கூடி பஞ்சாயத்து
பண்ணப்பார்க்கும். ஒரு முறை முட்டிக்கொண்டுவிட்டால் முடிந்தது கதை, அது யார் எவர், ஆணா பெண்ணா ஐந்து வயதோ ஐம்பது வயதோ அதெல்லாம் கணக்கே இல்லை. பிறந்த குழந்தையாகவே இருந்தாலும் எதிரிப் பட்டியலில் ஒருமுறை வந்தால் வந்ததுதான். உடனிருப்பவர்களுக்கு தினமும் தர்ப்பணம் நடத்திப் பிண்டம் வைக்கப்படும். சண்டை, தலைவிரி கோலம், வண்டை வண்டையாக வார்த்தைகள். சாமான்கள் உடைபடுதல், செருப்பு, சீவக்கட்டை பிய்ந்துபோகுமளவு அடி அப்பன் ஆத்தாள் புருஷன் அண்ணன் தம்பி, யாரென்றெல்லாம் பார்க்கப்படாது.
அடுத்த நாள் ஆபீஸில் போய்.
"அது காபி போட்றப்ப சுடு தண்ணி கொட்டீருச்சு" என்று தீப்புண்ணுக்கு காரணம் சொல்லிக்கொண்டிருப்பார் சார்ந்தோர். சிலசமயங்களில் காது சவ்வு பிய்ந்துவிடும். விரல்கள் உடைக்கப்படும். கண்கள் குத்தப்படும்.
"நான் என்ன செஞ்சேன். ஒரு தப்புமே பண்ணலியே? ஐயோ இன்னொருத்தரப் போயி நான் எப்புடி கன்ட்ரோல் பண்ண முடியும்? அவ சும்மா கேஷுவலா சொல்லீருப்பா, நீ பெருசு படுத்தாத ப்ளீஸ்"
"ஏண்டா சந்தக் கடைக்கி போறவன் வாறவனுக்குப் பொறந்தவனே, கட்டுன பொண்டாட்டி எனக்கு சப்போர்ட் பண்ணுடான்னா, எவளோ ***ல புழுப்புழுத்தவளுக்கு வரிஞ்சு கட்டீட்டு வர்றியாடா நாயே?"
"நீங்க பேசாதீங்க,
விட்டுகுடுத்து போங்க ஸார். கொஞ்சம் அவுங்குளுக்கு யாருமே இல்லைன்னு ஒரு ஃபீலிங். உங்காளுக
நல்லா மந்தரமெல்லாம் சொல்லுவீங்களே? நீங்களே சட்டைய கள்ட்டிபோட்ட்டு, கோந்துக்குட்டு ஓமம் வளத்தி எதாச்சி
கெரகம் இருந்துச்சுன்னா ஓட்டி உட்ருங்க. பாவம் அய்யிரு, நெம்ப நல்லவரு இருக்கற எடமே தெரியாது, புள்ளைக்கி
பன்னாரியம்மங் கோவில்ல மந்திரிச்சி கவுரு கொண்ட்டு வந்து குடுக்கோணும்."
"அவியளுக்கு வேற
சாமிக எதாச்சி இருந்தா பேசுவாங்கங், ஏனுங் நீங் வேரைங் கம்முனு
இருங் மச்சா..."
அங்கு
அப்படியென்றால், எங்கும் அதே கதை, எல்லாமே
அதே, வேறு வீடு, வேறு
சூழல் ஆனால் கதை ஒன்று. இடைவெளி
விட்டு ஒன்றறை மாதங்கள் கழித்து ஒரு சிறு பொறி
விழுந்தால் அங்கிருந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து, பதினேழு வருடங்கள் முன்பு நடந்த நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா, ஊதா கலர் ரிப்பன்,
கோலப்போட்டி, சப் டெக்ஸ்ட்டாக தன்னைக்
கரெக்ட் பண்ணாமல் வேறு ஒருத்தியைக் கரெக்ட்
பண்ணிய ஒருவன், பூப்புநன்னீராட்டுவிழாவில் ஊட்டம் ஊட்டிவிடும்போது, கன்னத்தில் சந்தனத்தைத் தேய்த்துவிட்டு,, கடைவாயில்
ஓங்கிக்குத்திய எவளோ அத்தை முறைக்காரி என்று ஒருவரை விடாமல் (அந்த மெண்டல் மவளுக்கு என்ன பிரச்சனையோ?)
அட, சத்தியமங்கலம் அல்லது கொடைக்கானல் ஹாஸ்டலில் இருந்து, கக்கத்தில்
படை வந்து டாக்டரிடம் காட்டப்போனால், அவள் -
என்னடி கெடாத்தி,
எவங்கூட படுத்துட்டு வந்த?" என்று
கேட்டது.
அந்தப்
பெரியாஸ்பத்திரி 'தோல் டாக்ட்டர் மெண்டல்
தேவுடியா' விடம் எல்லாருமே உன்னமாதிரி பலவட்டரத் தேவிடியாளா இருப்பாங்களாடி எச்சித் தேவிடியா என்று பெற்ற ஆத்தாளை அருகில் வைத்துக்கொண்டு கேட்கமுடியாமை, என்று அனைத்தும் சேர்ந்து....
ங்கொம்மாள...
குறி
வைத்தால் வைத்ததுதான், Block chain இன் வால் எப்படி
நீண்டுகொண்டே போகுமோ அதே மாதிரி, எதிரிகளின்
லிஸ்ட் அப்டேட் ஆகிக்கொண்டே போகும்.
"என்றா தாயோளி,
நான் யாருக்குடா பொறந்தேன்? உனக்கும் இந்தத் தேவிடியாளுக்குமா, இல்லைன்னா பக்கத்துவீட்டுக்காரனுக்கும் இந்த ஈனக்கண்டாரஓளி மகளுக்குமா?
சொல்றா ஈத்தரத் தேவிடியாளுக்குப் பொறந்தவனே. உன்ர தங்கச்சி என்ன
பெரிய மயிராளாடா? எங்கம்மாளப் பாத்தா உனக்கு எளக்காரமா? நீ குனிடி தாய்க் கெளவி கண்டாரஓளி, தேவிடியாளுக்குப் பொறந்த எடுபட்ட தேவுடியா, என்னடி நழுவறே? உன்ர மயித்தப் புடிச்சு ஆட்டவுடுடி தேவுடியா. எவங்கூட படுக்கறக்கு அள்ளி முடுஞ்சு மல்லிப்பூ சுத்திக்கறே? நாலு மாசமாச் சொல்லீட்டு
இருக்கேன் எனக்கு வவுத்துல அல்சர், மயிறு கொட்டுது, மூஞ்சியைப் பாத்தா, மொட்டுமொட்டாப் பருப் பூத்து
காறித்துப்பற மாதிரி இருக்குனு என்ற காலேஜ் சீனியர்
சொல்லீட்டான், காது குடுத்துக் கேட்டியாடி
தேவுடியா முண்ட?"
சொத்...சொத்...சொத்...சொத்...சொத்...சொத்...சொத்...சொத்...
அப்பனுக்கும்
ஆத்தாளுக்கும் சொல்லிச் சொல்லி அடி. சுதாரிக்கும் முன் மீண்டும்
மீண்டும் சொல்லிச்சொல்லி அடி. இது ஒரு கதை என்றால், இன்னொன்றில் -
நட்ட
நடு வீட்டில், குழந்தைகளை மிடில் ஸ்கூல் அல்ஜீப்ரா ஹோம் வொர்க்கைப் புலி
மாதிரிப்பாய்ந்து ஈரேழு ஜென்மங்களுக்கும் மறக்காதவாறு சொல்லிக்கொடுத்து, அமுதூட்டிக் கொஞ்சி தூங்கப்பண்ணிவிட்டு,
"உப்பவே அவுத்துக்காட்றன்டா
தாயோளி புருஷா, என்னடா இருக்கு அவகிட்ட? போயி குசலம் விசாரிக்கற
என்னமோ அந்தக் கண்டாரோலிக்கி எலும்பே கடிக்கத் தெரியாத மாரிக்கி? உனக்கு எங்கடா இருக்கு எலும்பு?காமிடா கண்டாரோலி மகனே நாங்கடிச்சு வுட்டுமா?
கறிவெறியெடுத்து எம்பட மொலையைக் கடிக்கறமாறிக்கி, கூதி வெறியெடுத்து அக்கா
தங்கச்சிககிட்ட போனவனே...தூ ....உம்பட பவுசு தெரியாதா...தூ..எம்பட கெழவி
தூமையக்கறச்சி உன்ர வாயிலையும் பொச்சுலயும்
ஊத்த."
நாலு
பேருக்குச் சமைக்கச்சொல்லிச் சொன்னால், விடிய விடியத் தூக்கமில்லாமல் புரண்டு படுத்துவிட்டு, நள்ளிரவில் இரண்டு மணிக்கு எழுந்து எண்ணெய் முழுக்காட்டிக் குளித்துவிட்டு, ஜகன்மோஹினி மாதிரி சமையல். ஒவ்வொரு ஐட்டத்திலும் பர்ஃபெக்ஷன். சைவமோ அசைவமோ, உண்பவர்கள் ஜென்மத்துக்கும் மறக்கமுடியாத, சுவைமொட்டுக்கள் நினைவு வைத்துக்கொண்டு ஏங்க வைக்கும் பர்ஃபெக்ஷன்.
நடுநிசிக் குளியல் மற்றும்
பத்துரூபாய் அளவு வட்டக் குங்குமத்
தீற்றலுடன் வரட் வரட்டென்று ஆறு தேங்காய்களைத் துருவுவது.
நாலு பேருக்கு சமைக்கச் சொன்னால் நாற்பது பேருக்குச் சமையல்.
விருந்தினர்
போனவுடன். ரேடாருக்குள் புதிதாக வந்த ஒருசிலர்...ப்ளாக்
செயினின் டெய்ல் எண்டில் போய்ச் சேர்ந்துவிடுவர். வந்து போனவர்கள் பார்வையில் தேவதை, சார்ந்தவருக்கு நன்றாக ஊசிக்குத்தல்களில் புதிதாக மேலும் சில கோனூசிகள் சேர்ந்திருக்கும். சண்டகளின் அழுகைகளின் நீளம் கூடிக்கொண்டே போகும்.
சில
சமயங்களில், எதிரிப்பட்டியலில் உள்ளவர்கள் மண்டைக்குள் பிராவாகமெடுத்து தூக்கமில்லாமல் செய்வார்கள்.
அவர்களை வண்டி போட்டுக்கொண்டு நேரில் சென்று மேற்சொன்ன வசைகளினும் கடும் குதர்க்க வசைகள்.
வசைகளில் அர்ச்சனை செய்து ஜென்மப்பகை, வர்க்கப்பகை, ஜாதிப் பகை, ஊர்ப்பகை, Siblings rivalry, Cousin rivalry என்று
எல்லாவற்றையும் ஏற்படுத்திவைத்துவிடுவது.
இவைகளை
அப்படியே ஆண் பெண் மாற்றிப்
போட்டுப் பார்த்து அவரவர் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை நேர்மையாக சீர்தூக்கிப்பார்த்தால்,
அக்காள்-தங்கை, தங்கை-அண்ணன், அண்ணன் -தங்கை, அண்ணன்-தம்பி மற்றும் எல்லா பெர்முடேஷன்ஸ் அண்ட் காம்பினேஷன்ஸிலும் ஒரு Blockade, அதாவது ஒரு பெருந்தடை ஏற்படுத்தி
சர்வநாசத்தை, ஜெயமோகனின் யக்ஷி கதைகளில் வரும் அளவு பெரும் பேய்களாக
வந்து குடும்பங்களுக்குள் வெகு சாதாரணமாக சம்மணம்
போட்டு அமரும் ஒன்றுதான் "Bipolar
disorder" (பைபோலார்
டிஸார்டர்) எனப்படும் மனப்பேய்! இது எந்தக் குடும்பத்தில் நுழைந்தாலும் அந்தக் குடும்பம் உருப்படாது. சரி அதை எப்படி விரட்டுவது?
ஐ!
அதற்குள் அவசரப்பட்டால் எப்படி misogynic நண்பா? இது ஆண் பெண் என்று எவரிலும் இருக்கும். ஆண் எபிஸோட் அடுத்து வரவிருக்கிறது
(தொடரும்)
Comments
Post a Comment