குதிரையின் குதமும் Intellectual Fakery யும்
சாமிநாதன் மெசேஜ் தட்டியிருந்தான். சலிப்புடன் என்னடா இது என்று கேட்டால்,
"படி புரியும்" என்று பதில் வந்தது.
"டேய் வேண்டாம், நான் இப்பதான் கொஞ்சநாளா நிம்மதியா இருக்கேன் விட்ரு, நம்மளய விட்டுப்போட்டு ஓடிப்போயிரு"
என்று சொன்னாலும் கேளாமல்,
"இல்ல, செம Interesting அண்ட் Intriguing. Intellectual சம்பந்தப்பட்டது அதுனாலதான் உனக்கு அனுப்பிச்சேன், இல்லைன்னா அனுப்புவனா?"
என்று என் வாயைப்பொத்தி, என் வீக் பாயிண்டைப்பிடித்து உருவிவிடுவது போல் உருவிவிட்டு, விலுக்கென்று பிடித்து இழுத்துவிட்டான். நான் சாதாரணமாகவே தூக்கித் தோளில் போட்டுகொண்டு அலைபவன் ("நான் ஒரு இண்டெலெக்ச்சுவல்" என்னும் மெடலைச் சொன்னேன்!), சும்மா இருப்பேனா? கிளர்ந்தெழுந்து லிங்க்கைத்திறந்து படிக்கப் படிக்க ரத்த அழுத்தம் எகிறியது.
"நான் செத்துவிடுவேன், செத்துவிடுவேன், செத்துவிடுவேன். உன்னுடனெல்லாம் இனிமேல் நட்பு வைத்துக்கொண்டால், செத்துவிடுவேன்"
என்று ஆத்திரம்தீரக் கத்தும் பாவனையில் வாட்சப்பில் பதில் எழுதினேன். நானே ஹார்ட் ப்ரேக்கில் இருக்கிறேன், ஏன் என்னைச் சீண்டுகிறாய் என்பது என் அங்கலாய்ப்பு.
நண்பகல் நேரத்து மயக்கம் ஒரு Fantasy படம் என்று எழுதி எழுதி விரல் வீக்கம் கண்டு, போஸ்ட் போட்டுவிட்டு, சாமி கொடுத்த லிங்கில் போய் பார்த்தால்,
பேய் படம், பிசாசு படம், கொண்டாட்டம், குறியீடு, என்று அதே பழைய கெழ்ட்டு டயரியா. அந்த 'டூரிங் டாக்கீஸ்' குதிரையின் சூத்தை, எவ்வளவு நேரமுங்கைய்யா உத்து உத்து பாக்கறது? அவ்வளவு வறுமை உள்ளவர்கள் 'டூரிங் டாக்கீஸ்' குதிரையைப் பொலி போட்டு, ஆறுமாதம் வைத்துத் தின்பார்கள். சும்மா துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்க மாட்டார்கள். குளிர் நாடுகளில் இங்கு நம் இந்தியாவின் தலைக்கு மேல், வடக்கில், வட மேற்கில் உஸ்பெகிஸ்தானிலிருந்து தொடங்கி ஸ்காண்டிநேவிய நாடுகள் வரை குதிரைக்கறி என்பது ஒரு டெலிகஸி. அப்படத்தில் வரும் குதிரைச் சூத்துக்காட்சியின் சோகத்தைப் பதியவைப்பதற்கு முப்பது வினாடிகளே போதும், என்ன வெங்காயத்துக்கு இரண்டரை மணிநேரக் காட்சிகள்? உறைபனிக்குளிர் நாடுகள் அனைத்திலும், மனிதனைத்தவிர, கண்ணில்படும் அனைத்து ஜீவராசிகளும் உணவுதான், நாய்கள் மற்றும் பூனைகளைத்தவிர. அவ்வளவு பெரிய குதிரையை வைத்துக்கொண்டு என்ன மசுத்துக்கு குண்டி காய்ந்துகொண்டு அப்பனும் மகளும் ஒற்றை உருளைக்கிழங்கை வெறுக் வெறுக் கென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்? ஏனென்றால் நாம் குதிரைச் சூத்தைப் பார்த்து வியந்து அதை ஒரு கலைப்படம் என்று போற்ற வேண்டும்!
என்ன நக்கலா? உலகத்திலேயே ஆகப்பெரிய போங்குத் திரை மொழி, மற்றும் Fake narrative & Fake narration தான் உங்களது ஃபேவரைட் குதிரைச் சூத்து திரைப்படம். (தலைவா, narrative வேறு, narration வேறு தலைவா! நண்பகல் மயக்கம் திரைப்படத்துக்கெல்லாம் என்ன நேரேடிவ் இருக்கிறது அல்லது இருக்கப்போகிறது தலைவா? திரைக்கு வெளியே அதற்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஆமாம் narrative க்கும் narration க்கும் வித்தியாசம் தெரியுமா? நீங்கதான் திரைமொழி அறிவில் கில்லியாச்சே உங்களுக்குத் தெரியாததா?)
நானாக இருந்தால், நாக்குத்தள்ளும் குதிரையை முப்பது நொடிகள் காட்டிவிட்டு, முப்பத்தொன்றாம் நொடியிலிருந்து அதை ஜிபா பண்ணும் காட்சி, பிறகு உப்புக்கண்டம் போடும் காட்சி என்று ரசனையுடன் எடுத்திருப்பேன்.
என்ன கெரகம்டா இது என்று மூடும் தருவாயில், இந்தளவு உணர்ச்சிவசப்படும் நிலைக்கு இட்டுச்சென்றது - Intellectual Snobbery என்னும் வார்த்தைப் பிரயோகம். 'Narrative' க்கு அடுத்தபடி மீண்டும் பீ. பி ஏறத்தொடங்கிவிட்டது. இந்த வெங்காய மயிர் ஸ்டராபெரியைத் தலையில் வைத்துக்கொண்டுதான், ஊரில் உள்ள உருப்படியாக வாசித்துக்கொண்டிருப்பவன் ரெக்டத்துக்குள்ளெல்லாம் விரலை விட்டு, நோண்டி, நோண்டி முகர்ந்து பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார் ஸீனியர். வேண்டுமானால் உங்களையெல்லாம் Intellectual Fakery என்று சொல்லலாம் ஸீனியர். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்களுக்கு 'அந்த ' இடம் மட்டும் கிடைக்காது, ஐயாம் ஸாரி ஸீனியர்.
நான் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறேன், ஐயா அது ஒரு Fantasy படம் ...Fantasy படம் என்று.
அடுத்தது அல்லக்கை மாமா எழுதியது.
அதுவும் அஃதே! பேய் வந்து இறங்குகிறது, நாய் வந்து இறங்குகிறது என்று. எதுல உன் இதுலயா இறங்குகிறது? சூத்தாம்பட்டையை, 'சூத்தாம்பட்டி' என்று எழுதும் தற்குறி முண்டம்தான் சமகால இலக்கியத்தில் விற்பன்னராம். தமிழில் ஒரு கெட்ட வார்த்தையை ஒழுங்காக, பிழையில்லாமல் எழுதத் தெரியாதவனெல்லாம் என்ன வெங்காயாளன்? எழுத்துப்பிழை என்றாலும் மன்னித்து விட்டுவிடலாம். தி தமிழ் ஹிண்டுவிலும், விகடனிலுமே கூட 'கொலை' யைக் 'கொளை' என்றுதான் எழுதுகிறார்கள் இப்போதெல்லாம்.
ஆனால் மற்றவர்களாலும், தமிழ்ச் சமுதாயத்தாலும்தான் தமிழ் செத்துவிட்டதாம். 'உச்சப் பிதா' சர்ட்டிபிக்கெட்.
அட Blockhead களா, நீங்கள் அந்தக் கேமராவை கையில் பிடித்துக்கொண்டு hooch அடித்த கிப்பன் குரங்கு மாதிரி அங்கும் இங்கும் கேமரா நிழல் கீழே விழுவது கூடத் தெரியாமல் ஓடி, அதை எடுத்து யூ ட்யூபில் குறும்படம் என்று ரிலீஸ் செய்து, கேமரா நிழல் விழுவது குறியீடு என்று ஓல் விட்ட லோபர்கள்தானே உங்கள் கும்பல்? ரிலீஸ் செய்ததுமட்டுமல்லால், உடனே 69 பொஷிஷனுக்குப்போய் அந்தக்கருமைத்தையெல்லாம் உலகத்தரமான உன்னத சினிமா என்று உங்களுக்குள்ளேயே பாராட்டிக்கொண்டவர்கள்தானே நீங்கள்? கனவைப் படமாக நொட்டுவதெல்லாம் வேறு கலையாம். கையில் பிடித்து ஆட்டிக்கொண்டே அதன் நிழல் விழுவது கூடத் தெரியாது ஓடுவது, அதைக்குறும்படம் எடுப்பது தான் கலையா? படம் பற்றி எழுதுகையில் 'புழுத்திகொண்டு' என்று கெட்ட வார்த்தை போட்டு எழுதுவாராம்.
உனக்கு மானிக்கொழுப்புத்தான இதெல்லாம்?
"நீ வா மகனே, அப்டீன்னா என்னனு சொல்றேன் உனக்கு"
நானும் கிளிக் குஞ்சுக்குச் சொல்வதுபோல், இது Fantasy படம் ...Fantasy படம். சூப்பர்டீலக்ஸ் மாதிரியான ஒரு Fantasy படம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்து படம் நெடுக பல க்ளூக்களை அள்ளித்தெளித்திருக்கிறார் லிஜோ. அதெல்லாம் போதாதாமா, இவருக்கு லீடு குடுத்து அவுக்கனுமாமா. அட தற்குறி, இதற்கும் மேல் நான் படத்துக்கு விளக்கம் எழுதப்போவதில்லை, எவ்வளவு மொத்தினாலும் உனக்கெல்லாம் அறிவு 69 ஐயும் த்ரீஸம்மையும் சுற்றிச்சுற்றித்தான் வரும். உனக்கெல்லாம் என்ன விளக்க மயிறு வேண்டிக்கிடக்கிறது? பிறிதோரு சந்தர்ப்பத்தில் இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதுவேன்.
நான் தமிழ் எழுத்தளார்களிடம் இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், தயவு செய்து ...
"உணவு பறிமாறும்போது அவள் கைகளைப்பார்த்தேன், அவை அப்படியே அம்மாவின் கைகள்" என்றோ
"உறங்கும்போது தந்தை என் தலையைத் தடவினார், நான் உருகிப்போய் கனவில் ஒன்றுக்கு சிந்தினேன்" என்றோ, பட்டியில் ஆட்டை அடைக்கப்போன மாரிமுத்து, அடுத்தநாள் காலை, ஊர்க்கிணற்றில் பிணமாக மிதப்பது போன்றோ, அல்லது கள்ளத்தொடர்புக் கதைகளோ இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக ஏதாவது எழுதித்தொலையுங்கள். இல்லையேல், வகுப்பை விட்டு வாத்தியார் தலை மறைந்ததும், அடுத்த வாத்தியார் வரும்வரை மீசை முளைத்த, கடைசி பெஞ்ச் கஞ்சா பையன்கள் வந்து வாத்தியின் நாற்காலியில் ஏறி உட்கார்ந்துகொண்டு அட்டகாசம் செய்வது போல், எழுத்துலகிலும் இது போன்ற ஒட்டுபொறுக்கிகள் வந்து உங்களுக்கெல்லாம் வகுப்பெடுப்பார்கள் என்று சொன்னால் கேட்டுத்தொலையுங்கள்.
Comments
Post a Comment