Great Gatsby காலம்

னித மனங்களின் ஆழ்மன வக்கிரங்கள் குறைந்த பாடில்லைசென்ற நூற்றாண்டில் இருபதுகளின் பிற்பகுதியில் Great Depression என்று ஒன்று தாக்கியது, ஆனால் அது மனநலம் சார்ந்ததல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கி, அசுரவேகத்தில் சரசரவென்று ஏறிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி, படீரென்று தடுக்கி தலைகுப்புற விழுந்து பற்கள் பதினாறையும் உடைத்துக்கொண்டது. நாம் மானுடர் என்று மனிதன் பெருமையடித்துக்கொள்ளும் அவனின் ஆதார குணநலங்களான பகுத்தறிவு, ஈகையுணர்வு, ஈரம், சக உயிர்களிடத்து அன்பு மற்றும் நட்பு பாராட்டுதல் இவை எதுவுமே, எக்காலத்திலுமே புராணகால யுகங்களில் கூறப்படுவதுபோல் எப்போதும் நிலைத்து நின்றதில்லை. மானுட விழுமியங்கள் அத்தனையும் வெறும் பாழ் கற்பிதங்கள், பொய், பித்தலாட்டம்.

 1929 -லும் பொருளாதாரம் நொறுங்கிக் குப்பலாகக் கீழே விழுந்தபோது, அப்படியே கனவுப்பொண்ணுலகம் போல் ஜொலித்துக்கொண்டிருந்த மானுட விழுமியங்கள், தீபாவளி மாலைவேளை முகூர்த் ட்ரேடிங்கின்போது குஜராத்தி, மார்வாடி பெரு முதலைகள் விருப்பத்துக்கேற்ப சாங்கியத்திற்கு பதினைந்து புள்ளிகள் ஏறிவிட்டு மீண்டும் அடுத்தநாளே பள்ளத்தாக்கில் நானூறு புள்ளிகள் கீழ் நோக்கிப்பாயும் பங்குசந்தையைப்போல் விழுந்து நொறுங்கியது. மேற்குலக நாட்டில் வசிப்பவர்களெல்லாம் Great Depression தாக்கிய சில மாதங்களுக்குள்ளாகவே தரித்திரர்கள் ஆனார்கள். மானுட ஈகோ சிறிது சிறிதாக அடித்து நொறுக்கப்பட்டு, பிச்சையெடுத்து பிச்சையெடுத்து மனவிலாசம் குறுகிக்குறுகி, இற்றுப்போன மிதிவண்டிஒரு இணை ஷூக்கள், கிழிந்த கோட்டு, ஒரு துண்டு ரொட்டி, இறைச்சித்துண்டு, அரைக்குவளை பால் அல்லது பியர், உருளைக்கிழங்கு, பிய்ந்துபோன குடை, ஒரு சிகரெட் என்று அனைத்துக்கும் அடித்துக்கொண்டார்கள்.

 அதற்கு சற்று முந்திய காலத்தில், புதிதாகக் கண்ணுற்ற பொருளாதார வளர்ச்சியிலும் கைக்கெட்டிய வசதிவாய்ப்புகளாலும் கிட்டிய திருப்தியுணர்வின் காரணமாக, சடீரென்று தாயுள்ளம் பீறிட வாழ்க்கையின் மீதான உவகையும், சக உயிர்களிடம் அரவணைப்பையும், பெருங்கருணையையும் மடைதிறந்ததுபோல் வெளிப்புறமாகவும், உள்ளுக்குள் அளவை ஒன்றினால் அளந்தளந்தும் வெளிக்காட்டிக்கொண்டு, தத்தமது மேட்டிமையைப் பறை சாற்றிக்கொண்டிருந்தவர்கள், பொருளாதார வீழ்ச்சி அடித்த அடியில் சுருண்டு விழுந்து, அறங்களிலும் விழுமியங்களில் மண்ணை நக்கி சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். இது காலம் காலமாக நடப்பதே.

 இந்தியர்களும் அவ்விதமே. இன, குல வித்தியாசமின்றி, அனைவரும் வாணிபர்கள் அல்லது பொருள்சார் மனம் படைத்தவரே. இந்தியா உட்பட உலகெங்குமுள்ள பழங்குடிகள் இதில் சேர்த்தி இல்லை. உண்மையான மனிதர்கள் அவர்கள்.

 சுயநலம், கொஞ்சம் பணத்தை அடைந்ததும் நெஞ்சு புடைப்பதும், அது இறங்கியதும் சுருண்டு படுத்துவிடுவதுமான பலவீனமான  ஈகோ கொண்டவர்கள். இவைகள்தான் இவர்களின் கடந்த பல நூற்றாண்டுகளாக ஆதார குணநலன்கள். அலுவலகமாக இருக்கட்டும், குடும்பமாக இருக்கட்டும், நட்பு வட்டமாக இருக்கட்டும், பொருளியல் அல்லது அவரவர் சில்லறை மதிநுட்பத்துக்குட்பட்டவர்கள் குழு சேர்ந்துகொண்டால் போதும், அவர்களது சுயரூபம் வெளிப்படும்.

 டிப்ரெஷன், பைபோலார், மேனியாக் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நோய்க்கூறு காரணமாக அவ்வாறு இருக்கிறார்கள், ஆனால் இவை எதுவுமே இல்லாமல் இருப்பவர்களில் உள்ள குறுமதிதான் அவர்களது உண்மையான பெறுமதியைக் காட்டிக்கொண்டே இருக்கிறது.

 இனி வரும் சிறு பகுதி ஒன்றின் மூலத்தொடர் ரொம்பவே ஆறப்போடப்பட்டுவிட்டது. எப்போதாவது மீண்டும் முழுவிசையுடன் எழுத முடியும்போது ஒரு தொகுதியாக வெளியிடப்படும் என்று நம்புகிறேன்கீழ்க்காண்பதை மேலும் விரித்து, புனைவுக்கு மூலமாக வைத்து எழுதினால், நான்கு தொகுதிகள் கொண்ட நாவலே தேறும்.

 பஞ்சகாலத்திலும், Great Depression காலத்திலும் கூட பகிர்ந்துண்டவர்கள் இருந்திருக்கலாம், ஆனால் தற்காலத்தில் மனிதர்களிடம் காணப்படும்  சுயநலமும், திமிரும், கபடமும், வஞ்சகமும், சிறுமையும் கணக்கிலடங்காதது.

 பணத்திமிர் வந்தால் எதை வேண்டுமானாலும் எள்ளி நகையாடலாம், எட்டி உதைக்கலாம்! அதுவே அவனவன் பெற்ற வாரிசுகளுக்கு டிப்ரெஷனோ பைபோலாரோ வந்தால், பைத்தியம் என்றோ, மாத்திரை போட மறந்திருப்பான்/ள் என்றோ சொல்வார்களா என்றால், மாட்டார்கள். மாறாக உடும்பை விழுங்கிய சாரைப்பாம்பைப்போல் வாயை மூடவும் முடியாமல், திறக்கவும் முடியாமல் ஒருநாள் துடிப்பார்கள்

 இப்போதைக்கு, பழைய பதிவு ஒன்றின் நினைவூட்டல்.

மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு உடல் அல்லது மனரீதியான  குறைபாடுகளைக்கண்டும் எவரும் நடுங்கி ஒடுங்கிவிடுவதில்லை, அங்கு சமூகத்தில் பெரும்பாலும் அவைகளுக்கான எந்த எதிர்வினையுமற்ற ஏற்பு உண்டு. தற்காப்புக்கலை, இசை, நடனம், உடற்பயிற்சி என்று எந்தப் பயிற்சி வகுப்புக்குச் சென்றாலும்  ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட அல்லது வேறேதோ விதத்தில் சவாலுக்குட்பட்ட குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. கை, கால் என்று எதிலும் உணர்ச்சியே இல்லாமல் சொந்தமாக ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஐந்து நிமிடங்கள், வாய் பேசாது, ஓரிரு சப்தங்கள் மட்டும் தொண்டையிலிருந்து வெளிப்படும், கண்களால் சில சைகைகள், உடலில் உயிர் மட்டும் இருக்கும், பத்தடி நகர ஒரு மணிநேரம், இங்கு நடக்கும் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இம்மாதிரி குறைந்தது நான்கைந்து குழந்தைகளை அல்லது இளைஞர்களை அல்லது இளைஞிகளை இங்கு வெகு இயல்பாகக் காணமுடியும். சற்கரநாற்காலிதான் உலகம். சார்ந்தவர்கள் ஒரு முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, இவர்களை அரவணைத்துச் செல்கிறார்கள்பெரிய அளவில் வசதியோ வருமானமோ இல்லாதவரும் கூடக் கைவிடுவதில்லை, சிறப்புக் குழந்தைகளையோ, மன நலக்குறைபாடுள்ளவரையோ முன்னிட்டு சமூகத்தை யாரும் சபிப்பதில்லை. பிச்சையெடுப்பதில்லை. அரசாங்கமும் ஓரளவு உதவி புரிகிறது. தன்னை வருத்திக்கொண்டு உழைக்கிறார்கள், உள்ளதை, வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். நமக்கு விதிக்கப்பட்டது இவ்வளவுதான் என்று நினைத்து ஒடுங்கிவிடுவதில்லை, ஒரு சவாலாக அவைகளை  எந்த முகச்சுளிப்போ, அலுப்போ இல்லாமல் எதிர்கொள்கிறார்கள் . சமூகம் என்ன  நினைக்கும், என்ன சொல்லும் அல்லது அப்படி ஒரு கோணமிருக்கிறது என்றே தெரியாதது மாதிரி வாழ்கிறார்கள். இவர்களுக்கு Purpose of life என்கிற  ஒரு கருத்துப்படிவத்தை ஏதோ ஒரு விதத்தில் மெதுமெதுவாக விதைத்துவிடுகிறார்கள். ஆச்சர்யிக்கத்தக்க வகையில், அது எங்கனம் எப்படி விதைக்கப்படுகிறது, எவ்வாறு, எப்போது பயிற்றுவிக்கப்படுகிறது என்றே நம்மால் அதை விளங்கிக்கொள்ளவியலவில்லை.

 இந்தியர்கள் போல் யாரும் சுயநலமாகச் சிந்திப்பதில்லை. அதற்காகப் பொதுநலம் என்கிற பெயரில் வெறுமனே சமூக வலைத்தளங்களில் வந்து அரை 'Shiba Inu' கூடப் பெறாத  கருத்தைக் கக்கிவிட்டுச் செல்வதில்லை. அத்தனை ஆன்மீகமும், கலாச்சாரங்களையும், தத்துவங்களையும், மதிப்பீடுகளையும், ஞானிகளையும் அவதார புருஷர்களையும் கொண்டுள்ள, எதிர்க் கருத்தியல்களையும் அரவணைத்துச் செல்கிற திறன்களை ஒரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நம் தேசத்தில், இன்று ஒரு தனி மனிதன் தன் சக மனிதனை எவ்வாறு மதிக்கிறான்

 ஒரு பேருந்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஏறுவாரானால், அவரை கண்களில் எந்தச்சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது. இறங்கி உதவுபவரை "ஸீன் போடறான்" என்று கொஞ்சமும் கூச்சநாச்சமே இல்லாமல் விமர்சிக்க முடிகிறது. ரயிலில் பிச்சையெடுக்கும் கண் தெரியாத நபரைக் காணும் நம்மால் -

 "கண்ணுதான இல்ல, கையும் காலும் நல்லாத்தான இருக்கு, எதுக்கு பிச்ச எடுக்கற?" என்று கேட்காமல் இருக்கத்தெரியவில்லை.

 கால்கள் இழந்தவரையும், கைகள் இல்லாதவரையும் திருடினான் என்று கட்டிவைத்துச் சித்திரவதை செய்கின்ற, காதலிக்கவில்லை என்று கழுத்தை அறுத்துக் கொலை செய்கிற, முகத்தில் அமிலத்தை வீசியடிக்கும் தனி நபர்களாக இருக்கிறோம்.

 எந்நேரமும் மனதுக்குள் சதித்திட்டம் தீட்டுகிறோம், சிறு சிறு விஷயங்களில் கூட சூழ்ச்சிக்கோட்பாடு ரீதியாகச் சிந்திக்கிறோம். மற்றவர்களுடன் எப்போதுமே ஒரு கணக்கீட்டுடனேயே பழகுகிறோம். ஆதாயமில்லாதோருடன் பழகுவதையே தவிர்க்கிறோம். உலகிலுள்ள எல்லா சில்லறைத்தனங்களையும் நம்மிடம் வைத்துக்கொண்டு, நாக்கு மீது பல்லைப்போட்டு  மற்றவரைப் பேசுகிறோம், பழிக்கிறோம்.

 இப்படி இருக்கும் கேடுகெட்ட ஒரு உலகில், பைபோலார் போன்ற சிக்கலான ஒரு மன நோய் பற்றிய புரிதலா வரும்

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15