காந்த்தாரா
க டந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து வியக்கத்தக்க தற்செயல் சம்பவங்கள் . அவைகளில் வெகு சுவாரஸ்யமான ஒன்று பஞ்சுர்லி . எங்கள் கொங்கு மண்டல துணிச்சல் எழுத்தாளர் வாமு . கோமு அவர்கள் நடத்தும் நடுகல் இலக்கிய இதழில் வெளிவந்த கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது . அதில் சத்தியப்பெருமாள் பாலுச்சாமி என்பவர் எழுதும் கட்டுரைகளும் கதைகளும் மரணக்காட்டு காட்டுகின்றன . ஆனால் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் வெளியே முகநூலில் வேறு ரூபம் காட்டுகிறார் . அது அவரது சுதந்திரம், அதில் நான் தலையிடமுடியாது . சத்தியப்பெருமாள் பாலுச்சாமி மற்றும் அவரது ஆக்கங்கள் பற்றித் தனியே ஒரு மதிப்புரை எழுதவேண்டும் . அவை பிறகு . சில மாதங்களுக்கு முன் வெளியான நடுகல் இதழில் முக்கியமான ஒரு கட்டுரை ஒன்றின் தலைப்பு அது . தலைப்பை வாசித்துவிட்டு ரொம்ப இலக்கிய இதழ்த்தனமாக இருக்கிறதே , ஏதாவது டச்சு இலக்கியத்திலிருந்து மொழி பெயர்த்த சிறு கதையின் தலைப்பாக இருக்கக்கூடும் என்று உள்ளே சென்று பார்த்தால் , அற்புதம் ! நான் மேற்சொன்ன தற்செயல் நிகழவிருக்கிறது என்று அப்போ