சோறு, கோவணம் மற்றும் கூரை
இ ந்த வாசிப்பு எழுத்து போன்றவையெல்லாம் ஏற்கனவே செகண்டரியாக இருந்தது. இப்போது தேர்டரி அல்லது ஃபோர்த்தரியாகப் போய்விட்டது. தற்காலம் சோறு, கோவணம், கூரை போன்றவைதான் முதன்மை. ஹிந்தியில், உர்துவில் அல்லது ஹிந்தி-உர்துவில் மக்கான், கப்டா, அவுர் ரோட்டி. தமிழில் அந்த வரிசையை அப்படியே ஷஃப்ல் செய்து, கொஞ்சம் நேட்டிவிட்டிக்குத் தகுந்தாற் போல் மொழிபெயர்த்திருக்கிறேன். "நான் என் ஆன்மாவின் அடியாழத்திலிருந்து... விம்முவது எப்படியென்று தெரியாமல் அதற்கு பதில் கூவுகிறேன், எனக்கு இதெல்லாம் முதன்மையில்லை தேர்ந்த வாசிப்பும் எழுத்தும்தான் என் உயிர் மூச்சு" என்றெல்லாம் நான் எழுதினால், அடுத்த வீதியில் குடியிருக்கும், எழுபதுகளில் இங்கு வந்து, இன்னும் அரை வார்த்தை ஆங்கிலம் கூடப் பேசத்தெரியாத செர்பிய அல்லது செக்கோஸ்லோவேக்கியக் கிழ அகதி, இதைத் தேடி மொழியாக்கம் செய்து படித்துவிட்டு வூட்ஸில் வாக் போகும்போது பின்புறமிருந்து வோட்கா பாட்டிலால் மண்டையைப் பிளந்து ஒஹையோ நதியில் வீசிவிடுவான். சோறு, கோவணம், கூரையெல்லாம் இல்லை, உண்மையில் எனக்கு ப்ரைமரி என்ன தெரியுமா? ங்கொக்கா...பணம்! என்னுடனிருக்கும்