Posts

எனக்குக் கிடைத்த வாத்தியான்கள்

“நான் நான்காம் வகுப்புப் படிக்கையில் பிலோமினா டீச்சர்தான் எங்கள் ஆங்கில ஆசிரியை .   நன்கு மத்தை விட்டுக் கடை கடையென்று கடைந்தெடுத்த மோரின் நிறம் , தங்க ஃபிரேமிட்ட சற்றே பெரிய மூக்குக் கண்ணாடி மூக்கிலிருந்து நழுவிக்கொண்டிருக்க, புடவையின் கொசுவத்தை லாவகமாக பிறந்த புதிதில் தொப்புள் கொடி தொங்கிக்கொண்டிருந்த ஓட்டை   தெரியுமாறு சொருகியிருப்பார் .” இப்படி ஆரம்பித்து ஸாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு போகுமளவு அந்த நான்காம் வகுப்பு டீச்சரை வர்ணித்து எழுதி , அந்தத் டீச்சரால்தான் என் வாழ்க்கையே மாறியது , அந்த சாரால்தான் சுமாராக முப்பத்தைந்து வயது வயோதிக ஆளின் செக்ஸ் வாழ்க்கைபோல் மந்தமாகப்போய்க்கொண்டிருந்த வாழ்க்கை எக்குத்தப்பாக மாறி " ராக்கெட் செக்ஸ் " லைஃப் ரேஞ்சுக்கு எகிறியது   என்றெல்லாம் ரைட்டப்புக்கள் ஒரே டெம்ப்லேட்டில் , பெயர்களையும் ஊர்களையும் மட்டும் லேசாக மாற்றிப்போட்டால் போதும் நமக்கான ஒரு ரைட்டப் தயார் என்கிற அளவு ஃபேஸ்புக்கில் குவிகின்றன . வர்ணனை என்று வரும்போது " சார் " என்றால் கண்டிப்பு , கையில்

ஆடோ என்னும் மனிதன்!

த லைப்பை வாசித்துவிட்டு ஒரு முரட்டு  இலக்கிய இதழில் வெளியாகவிருக்கும் கவிதை அல்லது சிறுகதையின் தலைப்பு என்று எண்ணிவிட வேண்டாம்.   இந்தியர்கள் பலர் யூஎஸ் வந்த சிறிது காலத்தில் இங்குள்ள ஆங்கில உச்சரிப்பில் வார்த்தைகளை உச்சரிக்கும்போது  செய்யும் பல தவறுகளில் முக்கியமான ஒரு தவறு என்னவென்று விளக்குவதற்கு தலைப்பில் உள்ள முதல் வார்த்தை ஒரு உதாரணம்.   Otto என்பதன் அமெரிக்க உச்சரிப்பை எழுத்தில் எழுதி விளக்குவது கடினம்.  Otto வின் உச்சரிப்பு, ஆடோவோ, ஆட்டோவோ, ஓட்டோவோ அல்ல. ஸ்பானிஷ் உச்சரிப்பான ஓத்தோவும் அல்ல! இலங்கைத்தமிழில், யாழ் மற்றும் மட்டக்களப்புக்காரர்கள் 'ஓற்றோ' என்றெல்லாம் எழுதுவதற்குக் காரணம், இலங்கையில் ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையில் இருக்கும். அவற்றை முடிந்த அளவு அதே உச்சரிப்புக்கு நெருக்கமாக, எழுத்தில் வாசிப்பவர்களுக்கு ஏதுவாக அப்படி எழுதுகிறார்கள். அதில் கொஞ்சம் போர்த்துகீசு பாதிப்பும் உண்டு. இது ஒரு தனி சப்ஜெக்ட், விரிவாக எழுதவேண்டும். ஆகையபடியால் இது இலங்கை உச்சரிப்பும் அல்ல. இது தமிழில், மலையாளத்தில் உள்ள 'ழ' வை எப்படி வேற்று மொழிக்காரர

நடுகல் இதழ் 15

இ து நடுகல் இதழ் 15 பற்றிய மதிப்புரையோ விமர்சனமோ அல்ல . அதை   வாசித்த வாசகனின் வெகு சுருக்கமான வாசிப்பனுபவம்  அவ்வளவே .   இதழ் 15 என் கைகளுக்குக் கிட்டியும் வாசிக்காமல் நீண்டநாட்கள் ஆறப்போடப்பட்டுவிட்டது . இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது . தலையங்கத்திலிருந்து வாசிக்கத்தொடங்கி , பிழை திருத்தும் வேலை ஆசிரியர் வா . மு . கோமுவின் தலையில் வந்து விடிவது , இன்பாக்ஸ்களில்  துண்டு   துக்கடா   கவிதைக் குதறல்கள் போன்றவற்றை வாசிக்க நேர்ந்தபோது , இந்த மனிதரின் இதழ் வெளியீட்டில் உள்ள ஈடுபாடு கண்டு பிரமித்தேன் . தலையங்கத்துக்கு அடுத்து வந்த   அனைத்துமே   சரசரவென்று கடந்து போயின . எழுத்துப்பிழைகள் , குறை கவிதைகள் பற்றிய அங்கலாய்ப்பு ஏற்படுத்திய சுவாரசியம் தவிர வேறு எதுவும் பெரிதாக  கவனம்   ஈர்க்கவில்லை . வாஸ்தோவின் நீண்ட தலைப்பிட்ட கதை ஒன்று முதல்வனே , வனே என்ற பழைய கம்பியூட்டர் கிராபிக்ஸ் பாடல் ஒன்றை நினைவுபடுத்தியது . நல்ல ஒரு சிற்றிலக்கிய இதழுக்கு உகந்த தலைப்புதான் . ஆனால் தலைப்பே எழுத்துப்பிழையுடன் ' தொப்பூள் ' என்று தொட