Posts

An Unsent Email

Dear Charu, Time and again, you still remain unsung in this society teetering on the brink of barbarism. Man, your resounding and echoing voice, akin to a solitary figure relentlessly chasing truth, is being meticulously inscribed in the annals of history. In due course, those who once slighted your wisdom shall introspect, and the true worth of your contributions shall gleam conspicuously. I believe it may have been insufficient and tardy, but you managed to seize the moment and still captivated everyone's attention. Indeed, I witnessed your address at the Bangalore literature gathering.  http://charuonline.com/blog/?p=13769 It's not the diction or the fluency, nor the mere mastery of public speech, but the elegance of your expression, even when faced with the challenges of the English language, that truly matters. You get across your point clearly and concisely, which is what is paramount in such forums. In fact, you came across as incredibly soulful and original. I cou

ஆப்பன்ஹைமர்

Image
"படம் எப்டி இருக்கு?" "வேர்ர்ர லெவல், வெரீ தானோங்" "படத்துல தலைவர எப்டி மாஸா காமிச்சிருக்காங்களா? "தலைவா... தலைவா... வேர்ர்ர லெவல் தலைவா... ப்ரோ நீங்க போயி பட்த்த பாருங்க ப்ரோ...நீங்க வேஸ்ட்டு ப்ரோ" "சம்பவம் செஞ்சிட்டாரு. எழுபத்தி ரெண்டு வயசுல சம்பவம் செஞ்சிட்டாரு (மதுரைப் பக்கம் வச்சி செஞ்சிட்டாரு etc.,). வேர்ர்ர லெவல் தலைவா." "அனி ப்ரோ சூப்பர் தலைவா, வேர்ர்ர லெவல்.... கூஸ் பம்ப்ஸ் தலைவா, பாருங்க ப்ரோ பாடோங் முஞ்ஜி ஒன் அவர் ஆவுது இன்னு கூடோங் கூஸ் பம்ப்ஸ் ஆவுது பாரு ப்ரோ" இதைப் பார்த்ததற்கே எனக்கும் கூஸ் பம்ப்ஸ் ஏறத்தொடங்க, மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்று படம் எடுத்தது போல் குஞ்ஞில் விதிர்த்த கூஸ்பம்ப்ஸ் என்று ஒரு டார்க் காமெடி படம் எடுக்க கதை ஒன்று மனதில் உருவாகத்தொடங்கியது. (இது புதுசு  - டார்க் காமெடியாமாம்) டார்க் காமெடி என்றால் சைக்கோ வில்லன்,  சுய  விரலையோ வேறு எதையோ வெட்டி ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும்போது, இன்னாடா இது, மண்புழு மாத்ரிக்து? என்று சொல்லிக்கொண்டே, அதை மீன் தொட்டியில் வீசிவிட்டு சிரிக்க வேண்டும். இங்கு எல்லாமே, வ

எனக்குக் கிடைத்த வாத்தியான்கள்

“நான் நான்காம் வகுப்புப் படிக்கையில் பிலோமினா டீச்சர்தான் எங்கள் ஆங்கில ஆசிரியை .   நன்கு மத்தை விட்டுக் கடை கடையென்று கடைந்தெடுத்த மோரின் நிறம் , தங்க ஃபிரேமிட்ட சற்றே பெரிய மூக்குக் கண்ணாடி மூக்கிலிருந்து நழுவிக்கொண்டிருக்க, புடவையின் கொசுவத்தை லாவகமாக பிறந்த புதிதில் தொப்புள் கொடி தொங்கிக்கொண்டிருந்த ஓட்டை   தெரியுமாறு சொருகியிருப்பார் .” இப்படி ஆரம்பித்து ஸாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு போகுமளவு அந்த நான்காம் வகுப்பு டீச்சரை வர்ணித்து எழுதி , அந்தத் டீச்சரால்தான் என் வாழ்க்கையே மாறியது , அந்த சாரால்தான் சுமாராக முப்பத்தைந்து வயது வயோதிக ஆளின் செக்ஸ் வாழ்க்கைபோல் மந்தமாகப்போய்க்கொண்டிருந்த வாழ்க்கை எக்குத்தப்பாக மாறி " ராக்கெட் செக்ஸ் " லைஃப் ரேஞ்சுக்கு எகிறியது   என்றெல்லாம் ரைட்டப்புக்கள் ஒரே டெம்ப்லேட்டில் , பெயர்களையும் ஊர்களையும் மட்டும் லேசாக மாற்றிப்போட்டால் போதும் நமக்கான ஒரு ரைட்டப் தயார் என்கிற அளவு ஃபேஸ்புக்கில் குவிகின்றன . வர்ணனை என்று வரும்போது " சார் " என்றால் கண்டிப்பு , கையில்

ஆடோ என்னும் மனிதன்!

த லைப்பை வாசித்துவிட்டு ஒரு முரட்டு  இலக்கிய இதழில் வெளியாகவிருக்கும் கவிதை அல்லது சிறுகதையின் தலைப்பு என்று எண்ணிவிட வேண்டாம்.   இந்தியர்கள் பலர் யூஎஸ் வந்த சிறிது காலத்தில் இங்குள்ள ஆங்கில உச்சரிப்பில் வார்த்தைகளை உச்சரிக்கும்போது  செய்யும் பல தவறுகளில் முக்கியமான ஒரு தவறு என்னவென்று விளக்குவதற்கு தலைப்பில் உள்ள முதல் வார்த்தை ஒரு உதாரணம்.   Otto என்பதன் அமெரிக்க உச்சரிப்பை எழுத்தில் எழுதி விளக்குவது கடினம்.  Otto வின் உச்சரிப்பு, ஆடோவோ, ஆட்டோவோ, ஓட்டோவோ அல்ல. ஸ்பானிஷ் உச்சரிப்பான ஓத்தோவும் அல்ல! இலங்கைத்தமிழில், யாழ் மற்றும் மட்டக்களப்புக்காரர்கள் 'ஓற்றோ' என்றெல்லாம் எழுதுவதற்குக் காரணம், இலங்கையில் ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையில் இருக்கும். அவற்றை முடிந்த அளவு அதே உச்சரிப்புக்கு நெருக்கமாக, எழுத்தில் வாசிப்பவர்களுக்கு ஏதுவாக அப்படி எழுதுகிறார்கள். அதில் கொஞ்சம் போர்த்துகீசு பாதிப்பும் உண்டு. இது ஒரு தனி சப்ஜெக்ட், விரிவாக எழுதவேண்டும். ஆகையபடியால் இது இலங்கை உச்சரிப்பும் அல்ல. இது தமிழில், மலையாளத்தில் உள்ள 'ழ' வை எப்படி வேற்று மொழிக்காரர