Skip to main content

Posts

நிச்சோட்னா

இ துவே ரொம்ப லேட்தான் . கொரோனா காரணமாகத் தள்ளிப்போய்விட்டது . எல்லாவற்றையும் ஆரம்பித்துவைத்தது மனிஷ் ஷா என்பவர்தான் என்று நான் சொல்வேன் . நான்கு ஸ்டேட்களைத் தாண்டி வெளியே போகாமல் இருந்த தமிழ் , தெலுங்குப் படங்களை உரிமை வாங்கி   சர சரவென்று குடிசைத்தொழில் மாதிரி டப் செய்து யூ ட்யூபில் வெளியிட்டார் . அவை இந்தியாவையும் தாண்டி , பங்ளாதேஷ் , பாகிஸ்தான் , நேபாள் என்று பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டன . ஒரு வகையில் பாகுபலிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்று கூட சொல்லலாம் . அதற்கும் முன்பு சங்கர் இயக்கிய ரோபோ படம் வந்தபோதுகூட , ஏதோ ரஜினி முகத்துக்காகவும் புகழுக்காகவும் இரண்டு ஷோக்கள் கூடுதலாக ஓடின , அவ்வளவே . பாகுபலியைப் பொறுத்த வரை அவ்வளவு பெரிய பட்ஜெட் , நடிகர்கள் என்று வைத்துக்கொண்டு ப்ரேவ் ஹார்ட் ரேஞ்சுக்கு எடுத்திருக்கவேண்டிய படத்தை , லும்பக் க்ளாஸிக்காக எடுத்து ஒரு மாஸ் ஹிஸ்டீரியாவையும் கிளப்பிவிட்டுவிட்டார் . வணிகப் படங்களாகவே இருந்தபோதிலும் , ராட்சஸன் மற்றும் விக்ரம் வேதா போன்ற நல்ல விறுவிறுப்பான கதை மற்று...

ஆங்கில லும்ப்பனும் தமிழ்ச் சும்பனும்

இ ருக்கிற பிரச்சனைகள் எல்லாம் போதாது என்று   புதிதாக ஒரு பிரளயம்   வெடித்திருக்கிறது . முதன் முதலில் சாருதான் இந்த லும்பன் பிரச்னையை ஆரம்பித்து வைத்தது . புஷ்பா வந்த புதிதில்   கூட , ஒரு போஸ்ட் போட்டு   சாரு , அப்டீன்னா என்ன சாரு எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது என்று கேட்டிருந்தேன் . அவர் ஒளரங்கஸேபில் படு பிசியாக இருந்ததனால் , என்னைப்போன்ற Readers ஐயெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் . இப்போது மறுபடியும் நாம் Write பண்ணிக் கேட்க வேண்டியிருக்கிறது . இம்மாதிரி கிணற்றில் போட்ட கற்கள் பல உண்டு . ஆனால் இரண்டாம் முறை எனக்கு அந்த ஐயம் வலுத்த கையோடு துரிதமாக விளக்கமும் கிடைத்துவிட்டது . Straight from horse's mouth. ஆனால் it was bit too late by then. முதலில் லும்பன் என்றால் சும்பன் மாதிரி நினைத்துக்கொண்டிருந்தேன் . சும்பனுக்கும் அர்த்தம் தெரியாது . தெற்கத்தி ஊர்க்காரர்கள் வாயில் சென்று அது மருவி " சொம்பை " என்று மருவி விட்டது போலும் . " நாங்கன்னா மட்டும் என்ன சொம்பைங்ய...

Cookery Mockery

அ ந்தத் தலைப்பை அப்படியே தமிழில் எழுதினால் "குக்கெரி மாக்கெரி" என்று எழுதவேண்டும். படிப்பதற்கே ஒரு மார்க்கமாக இருப்பதால் அப்படி எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். இந்தக்காலத்தில் எந்நேரமும் அடுப்படியில் நின்று ஆக்கி, இறக்கி, சோறு போட்டு, சோறு தின்று, சட்டி கழுவிச் சலிக்கும் பெண்களைத் தவிர, மற்ற வேலைகளிலோ தொழில்களிலோ ஈடுபடும் பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும், ஒரு மாறுதலுக்காகச் செய்து பார்க்க விரும்பும் ஒன்றுதான் சமையல் என்பது. எழுத்தில் உள்ள சமையற் குறிப்புகள் இனி தேவையில்லை, எது வேண்டுமானாலும் யூ ட்யூபில் வந்து கொட்டுகிறது. ஆனால் பிரச்சனையும் அங்குதான் தொடங்குகிறது.  ஒரு காலத்தில் ஆங்காங்கே மின்மினிப்பூச்சிகள் மாதிரித் தோன்றி மறைந்த சிட்டுக்குருவி வைத்தியர்கள் கொரோனா அலையில் பல்கிப் பெருகி புற்றீசல் மாதிரி வந்துகொண்டேயிருந்தார்கள். வரமிளகாயை ஊறப்போட்டு அரைத்து அதை எடுத்து மூக்கிலும் நெற்றியிலும் பற்றுப்போட்டால் கொரோனா மட்டுப்படும். 90% நுரையீரல் பழுதடைந்த கொரோனா பேஷண்ட்டை எழுப்பி அவர் மூக்கில் காய்ச்சிய கழுதைப்பாலில் சித்தரத்தையைப் பொடித்துப் போட்டு பழுக்கக் கா...

பழகுவதில் நீலமும் இளஞ்சிவப்பும்

சி றுவயதிலிருந்து  நான் எதிர்கொண்ட மற்றும் இன்னமும் எதிர்கொண்டுவரும் மிக முக்கியப்பிரச்சனை ஒன்று. இதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவதே இல்லை.  எந்நேரமும் பெண்ணியமும் நொன்னியமும்தான் புடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? மணமாவதற்கு முன் என் தாய், தமக்கை. இப்போது இவள்.  என்ன பிரச்சனை?  நெட்டி நெட்டித் தள்ளுவது. போ போய்ப் பேசு, போய்ப் பழகு. சரி பழகலாம் என்று போனால், நாமே இந்த விஷயத்தில் ஒரு தத்தி, இம்மாதிரி சமயங்களில் நமக்கு எதிரில் வருபவன் அதை விடப் பெரிய தத்தியாக வந்து அமைந்து தொலைக்கிரான்கள்.  முதலில் நான்-   'ஹலோ எப்டி இருக்கீங்க?' 'இருக்கேன்'  'எங்கே இந்தப்பக்கம்?' 'சும்மா அப்டியே'  'நாளைக்கி லீவுங்களா?' 'இல்லிங்க எங்கத்த? பசங்க ரொம்ப நாளா  தொல்ல, அதான் சும்மா அழைச்சிட்டு போலாம்னு...நமக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம்?' 'ஆமா கரெக்டு. சாப்டாச்சுங்களா?' 'ம்ம் ஆச்சு. என்னத்த இந்த வயசுல? வீட்டுக்கு வாங்க ஒருநாள் கண்டிப்பா' 'வந்தர்றோம்' 'அவங்க பேசி முடிச்சுட்டாங்களா? போலங்களா?'  'தெரிலீங்க. ஆமா முடிச்சுட்டாங்கனு நெனை...

சிறுகதை: குருவைத் தேடு

நா ன் இங்கு வந்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முகநூலில் கண்டுபிடித்த  பல வருடங்களாகத் தொலைந்து போன  பள்ளித்தோழன் அரசு. சென்ற முறை அழைத்திருந்தான் செல்லவியலவில்லை.  சிகாகோ சென்று பனி கொட்டித்தீர்க்கும் நான்கு நாட்கள் என் மனைவியின் தோழி வீட்டில் தங்கி உண்டும் உறங்கியும் சீட்டாடியும் கிரிக்கெட் கண்டுகழித்தும் கழித்துவிட்டு  வந்துவிட்டிருந்தோம். இம்முறை அரசுவின் அன்பு அழைப்பை ஏற்று  அவன் சொந்தமாக வாங்கியிருக்கும் கனவு மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தோம். அவனது பதினோரு வருட அமெரிக்கக் கனவு இவ்வீடு. முதல் அரைமணியில் வீட்டை ஃபெசிலிட்டி டூர் போலக் காண்பித்துவிட்டு, நீ ரெஸ்ட் எடு நான் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன் என்று என்னைத் தவிர்த்துவிட்டு  அண்டை அயலார்  நட்புக்  கூடுகைக்குச் சென்றுவிட்டான். அவன் போக்கிடம் பற்றிக்  கிச்சன் கேபினட்டின் மூலம் பின்னால் அறிந்துகொண்டேன். இவன் வீட்டில் கீழ் தளத்தில் ஒரு டேபிள் டென்னிஸ் மேஜையும் ஹோம் தியேட்டரும் உண்டு. ஆனால்  இன்று பக்கத்து வீட்டின் கீழ் தளத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டியின் ஒரு அங்கமாக  பூல் (po...