Skip to main content

Posts

சிறுகதை: குருவைத் தேடு

நா ன் இங்கு வந்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முகநூலில் கண்டுபிடித்த  பல வருடங்களாகத் தொலைந்து போன  பள்ளித்தோழன் அரசு. சென்ற முறை அழைத்திருந்தான் செல்லவியலவில்லை.  சிகாகோ சென்று பனி கொட்டித்தீர்க்கும் நான்கு நாட்கள் என் மனைவியின் தோழி வீட்டில் தங்கி உண்டும் உறங்கியும் சீட்டாடியும் கிரிக்கெட் கண்டுகழித்தும் கழித்துவிட்டு  வந்துவிட்டிருந்தோம். இம்முறை அரசுவின் அன்பு அழைப்பை ஏற்று  அவன் சொந்தமாக வாங்கியிருக்கும் கனவு மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தோம். அவனது பதினோரு வருட அமெரிக்கக் கனவு இவ்வீடு. முதல் அரைமணியில் வீட்டை ஃபெசிலிட்டி டூர் போலக் காண்பித்துவிட்டு, நீ ரெஸ்ட் எடு நான் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன் என்று என்னைத் தவிர்த்துவிட்டு  அண்டை அயலார்  நட்புக்  கூடுகைக்குச் சென்றுவிட்டான். அவன் போக்கிடம் பற்றிக்  கிச்சன் கேபினட்டின் மூலம் பின்னால் அறிந்துகொண்டேன். இவன் வீட்டில் கீழ் தளத்தில் ஒரு டேபிள் டென்னிஸ் மேஜையும் ஹோம் தியேட்டரும் உண்டு. ஆனால்  இன்று பக்கத்து வீட்டின் கீழ் தளத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டியின் ஒரு அங்கமாக  பூல் (po...

அ.பு வின் தொடக்கம்

  கொ ரோனா கடுப்பும் கோபமும் இன்னும் தாளாமல் கெட்ட வார்த்தை மாதிரி "அ. பு" என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நினைக்கலாம். முகாந்திரமும் இல்லாமல் இல்லை. டிசம்பர் 7 அன்று கொடுத்த சாம்பிள் இன்னமும் PCR டெஸ்ட் செய்யப்படவில்லை. இன்றோடு ஒரு  வாரம் ஆகிறது ஆன்லைனில் "Test Result not available yet" என்று வருகிறது.  அது தொலையட்டும். சரியாக ஒரு வாரம் முன்பு நான் இழந்த வாசனை மற்றும் சுவை உணர்வு இன்னும் திரும்பிய பாடில்லை. அப்போது தோன்றிய ஒன்றுதான் கீழ்க்காணும் அ.பு, அதாவது அறிவியல் புனைவு! (கீழ்க்காணும் லிங்கில் க்ளிக் செய்து படித்து இன்புறுக / திட்டுக) அ.பு - க்வாண்டமும் மெய்யியலும் #1 -ப்ரஸன்னா

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஐந்து)

இ ந்த மூடிக்குடியே கூட மணங்களைப் பகுத்தறியவியலா கோதையின்  நுகர்சிப்  புலன் சார்ந்த ஒரு குறைபாடு காரணமாகத்தான்  சாத்தியப்படுகிறது. வயிற்றினுள் மெதுவான வன்கோரத்துடன் விரவிப்பரவுகின்ற கச்சைச் சாராயம் விருவிருவென உட்கிரகிக்கப்பட்டு குருதியில் கலந்து நாசிவழியே கசிந்து நாறிக்கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் சத்தமில்லாமல் போய்ப்  புழங்க முடிகிறது. சில மூடிகள் அதிகமானால் அதற்கும் வினை.  வீட்டில் குடிக்கத்தொடங்கியவனை சில முறை எச்சரித்தும் கேட்கவில்லை. உனக்கு என்னடி தெரியும் ஆபீசுல எவ்ளோ ப்ரச்சன தெரியுமா? சரக்கடிச்சா எவ்ளோ ரிலாக்சா இருக்கு தெரியுமா? என்றுவிட்டு நடு நடுவில் எமொஷனல் ரொமான்ஸ் கொடுத்தான். அது அவளுக்குப் புரியவே இல்லை.  ஆனால் அதில் ஒருவித  ஒருவித கிக் இருந்தது. அட இது புது மாதிரி இருக்கிறதே என்று முதலில் ரசித்தவள், இவன் ரொம்ப ஓவராகப்போகவே, ஊரில்  உள்ள  சில அக்காள்களிடம் போன் செய்து கேட்டிருக்கிறாள். அவர்களே குடி கிராஜுவேட் ஆகிப் பலவருடங்கள் ஆகின்றன. குடல் கறியுடன் ஊறுகாய் நக்கிகொண்டே ஒன்றரை குவாட்டர் அடித்துவிட்டுப் புருஷனுடன் ஜாலி ப...

ஆசிரிய ஓநாய்கள்

கோ வைச் சம்பவம் கடும் மன உளைச்சலைக் கொடுத்தது. இத்தனை நடந்திருக்கிறது கடந்த ஒன்றரை வருடங்களில், ஆனால் அந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமையைப்பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் அந்த ப்ரின்ஸிபல் ஈத்தரை உடனடியாக போலீசுக்குப் போகாமல் அவளை கவுசிலிங் என்ற பெயரில் தாங்கொனாக் கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறாள். இதைச் செய்துவிட்டு தினமும் அவளுக்கு எப்படி சோறு இறங்கியது என்று தெரியவில்லை. கூட இருக்கும் சிறுவனுக்கும் கூட பாவம் என்ன செய்வது என்றே தெரியாமல் இதெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் திருடனிடமே நியாயம் கேட்கப்போனது மாதிரி அந்த பிரின்சிபால் தடிச்சியிடமும் அந்தக் காவாலி வாத்தியான் பெண்டாட்டிடமும் போய்ச் சொல்லியிருக்கிறான். அவளும் இவனை பொத்திப் பொத்தி காப்பாற்றி இருக்கிறாள். அவள் இம்மாதிரி protect பண்ண வேண்டிய காரணம்? இவனிடம் இருக்கும் ஒரு மொன்னைச் சாமானும் இவன் போடும் இரு வேளை சோறும்! தூ என்ன சமூகம் இது?  இவன் அக்காரியத்தை செய்ய எத்தனிக்கும்போதே தேவுடியா மவனே என்று பாய்ந்து அவன் ஜட்டிக்குள் கையை விட்டு கொட்டையைப் பிணைந்து பசை செய்து இவன் பொண்டாட்டிக்குப் பார்சல் செய்திருந்தால், சாமான் போன நப...

களமாடும் கருப்புத் தொப்பி

  மா ர்ட்டின் க்ரோ, மார்க் க்ரேட்பேட்ச் மட்டை இரட்டையர் மற்றும் கெவின் லார்சன், டேனி மோரிஸன் பந்துவீச்சு இரட்டையர் என்று அந்தகாலத்திலிருந்தே யாம் நியூஸீலாந்து அணியின் தொடர் விசிறி. 90களில் இங்கு வந்து சுழற்பந்தில் திணறி அடிவாங்கித் தோற்று ஊர் சென்று, பிறகு துணைக்கண்ட அணியினரை நீங்கள் இங்கு வாருங்களடா  என்று அழைத்து அப்போதுதான் அறுவடை முடிந்த நெல்வயல் மாதிரி இருக்கும் ஆடுகளங்களில் விட்டு பந்துக்கிண்ண மூட்டுகளையும் விலாக்களையும் வேலை பார்த்து அனுப்புவார்கள்.  இந்தியாவின் மிக முக்கிய ஒருநாள் உலகக்கோப்பை எதிரி! 99 இல் சூப்பர் சிக்ஸில் ஜிம்பாவேவுடன் தோற்ற குற்ற உணர்வுடன் குமுறிக்கொண்டிருந்த இந்திய அணியை சூப்பர் சிக்ஸிஸ் 250+ ஓட்டங்களை அனாசயமாக அடித்து வெளியேற்றியது. இருபது வருடங்கள் கழித்து வரலாறு திரும்பவுது போல், 2019 இல் மறுபடி அரையிறுதியில் இருந்து அடித்து விரட்டியது. 2003 இல் ஜாகீர் கான்  திடீர் வாசிம் அக்ரமாக அவதாரம் எடுத்து நியூஸிலாந்தை மிரட்டி வெளியேற்றி ஆறுதல் அளித்தார்.  என் வாழ்நாள் கனவே நியூஸீலாந்து ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வது என்பதுதான். சென்ற முற...

சாவியின் ஆவியும் கவுண்டமணியின் கேர்ள் ஃப்ரெண்ட்டும்

இ துவரை போட்ட பதிவுகள் அனைத்துமே உட்கார்ந்தால்  ஒரே சிட்டிங்கில் பரபரவென அடித்து ஒரு மாதிரி தேறி வந்ததுமே மேலோட்டமாக ஒரு மேய் மேய்ந்துவிட்டு அப்படியே பதிவேற்றியிருந்தேன். ஒரு சிலவற்றை சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் லேசாகச் செப்பனிட்டதும் உண்டு. ஆனால் சென்ற அமெரிக்க தீபாவளியும் த்ரிநாரீ நர்த்தனாவும் என்ற பதிவை மட்டும் ரொம்ப நேரத்திற்கு திரும்பிப் பார்க்க மனமே வரவில்லை. எழுதி முடித்தபிறகு கழிவிரக்கம் காரணமாக கிட்டத்தட்ட அழுதே விட்டேன். பின்னே? பிள்ளையார் சுழி போட்ட அடுத்த நொடியே  ராஜி வந்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று ரொம்ப ஆர்வமாக சிரித்துக்கொண்டே கேட்க, நானும் ரொம்ப வெள்ளந்தியாக டாபிக் இன்னதுதான் என்று காது வரை இளித்துக்கொண்டே சொல்லித்தொலைத்து விட்டேன். பொறி வைத்துப்பிடித்துவிட்டாள் கெரகம். ஒரு அக்ஷரம் தமிழ் தெரியாவிட்டாலும் நான் என்னவெல்லாம்  எழுதுவேன் எப்படியெல்லாம்  எழுதுவேன் என்று என் மூஞ்சியைப் பார்த்ததுமே எப்படித்தான் கண்டு பிடிக்கிறாளோ தெரியவில்லை. அறவே எழுதக்கூடாது. உன்னால் எங்களையும்  ஜட்ஜ் பண்ணுவார்கள், outcast பண்ணிவிடுவார்கள் என்று ஒரே அடம். ...

கோஹ்லியும் கோழியும்

L. கார்த்தி என்ற பால்ய நண்பன் அவன் வீட்டில் எனக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி உண்டு! அவன் வீட்டு கருப்பு வெளுப்புத் திரை தொலைக் காட்சிப்பெட்டியில் ஒரு உலகக்கோப்பை நேரத்தில் கிரிக்கெட் அறிமுகம். எந்த ஆண்டு உலகக்கோப்பை என்று சொல்லமாட்டேன். அவன் புண்ணியத்தில்தான் கொஞ்சம் அடிப்படை ஆட்ட விதிகளைக் கற்றுக்கொண்டு என்னுடைய கிரிக்கெட் ரசிக வாழ்க்கை தொடங்கியது. கிரிக்கெட் தெரிந்த அளவு நூறில் ஒரு பங்கு கூட மற்ற விளையாட்டுகள் பற்றித் தெரியாது. அந்தக் கோப்பைக்குப் பிறகு ஓரிரு வருடங்கள் கிட்டத்தட்ட எல்லா தொடர்களையும் ரங்கநாதன் என்ற கல்லூரி கால நண்பன் வீட்டிலேயே கண்டு களிக்கலாயினேன்.  தொடர் தோல்விகள். அக்காலகட்டங்கில் இந்தியா எதோ ஒரு ஆட்டத்தில் வெல்வதே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. என்றாவது ஒருநாள் வெல்லும் என்ற ஏக்கம் இருக்கும். அதற்குப் பிறகான காலகட்டங்களில் பல சுவாரசியமான தொடர் வெற்றிகள் மற்றும் சச்சின், திராவிட், லக்ஷ்மன் போன்றவர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் என்று புள்ளி விபரங்கள் கூட அத்துப்படியாக இருந்தது.  இந்திய அணியின் மீது பெரிதாக  எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த 2003 உலகக்கோப்ப...