அ ந்தத் தலைப்பை அப்படியே தமிழில் எழுதினால் "குக்கெரி மாக்கெரி" என்று எழுதவேண்டும். படிப்பதற்கே ஒரு மார்க்கமாக இருப்பதால் அப்படி எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். இந்தக்காலத்தில் எந்நேரமும் அடுப்படியில் நின்று ஆக்கி, இறக்கி, சோறு போட்டு, சோறு தின்று, சட்டி கழுவிச் சலிக்கும் பெண்களைத் தவிர, மற்ற வேலைகளிலோ தொழில்களிலோ ஈடுபடும் பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும், ஒரு மாறுதலுக்காகச் செய்து பார்க்க விரும்பும் ஒன்றுதான் சமையல் என்பது. எழுத்தில் உள்ள சமையற் குறிப்புகள் இனி தேவையில்லை, எது வேண்டுமானாலும் யூ ட்யூபில் வந்து கொட்டுகிறது. ஆனால் பிரச்சனையும் அங்குதான் தொடங்குகிறது. ஒரு காலத்தில் ஆங்காங்கே மின்மினிப்பூச்சிகள் மாதிரித் தோன்றி மறைந்த சிட்டுக்குருவி வைத்தியர்கள் கொரோனா அலையில் பல்கிப் பெருகி புற்றீசல் மாதிரி வந்துகொண்டேயிருந்தார்கள். வரமிளகாயை ஊறப்போட்டு அரைத்து அதை எடுத்து மூக்கிலும் நெற்றியிலும் பற்றுப்போட்டால் கொரோனா மட்டுப்படும். 90% நுரையீரல் பழுதடைந்த கொரோனா பேஷண்ட்டை எழுப்பி அவர் மூக்கில் காய்ச்சிய கழுதைப்பாலில் சித்தரத்தையைப் பொடித்துப் போட்டு பழுக்கக் கா...
An Open Personal Journal